1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சிக்கனை தோலுடன் சாப்பிட்டால் என்னவாகும்?

இது தெரியுமா ? சிக்கனை தோலுடன் சாப்பிட்டால் என்னவாகும்?

நாம் விரும்பி சாப்பிடும் கோழிக்கறியை பற்றி பல சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் நிலவுக்கின்றன.

உதாரணமாக, கோழியின் தோலில் அதிக அளவு கொழுப்பு இருப்பதாக அறியப்படுகிறது. அதனால், கோழியை தோலுடன் சாப்பிடுவது நல்லதா அல்லது உணவை சமைப்பதற்கு முன்பு அதை நீக்க வேண்டுமா?

"கோழி தோலில் 32 சதவீதம் கொழுப்பு உள்ளது. அதாவது 100 கிராம் கோழித் தோலில் 32 கிராம் கொழுப்பு உள்ளது.கோழி தோலில் உள்ள இந்த கொழுப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, "நல்ல கொழுப்புகள்"(unsaturated fats) என்று அறியப்படுபவை. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவுகின்றன.இந்த கொழுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு "கெட்ட கொழுப்பு" (saturated fat). இது நம் உடலில் உள்ள "கெட்ட" கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.

"கோழியை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால், கலோரிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கும்" என்கிறார் நிபுணர்.


இது தெரியுமா ? சிக்கனை தோலுடன் சாப்பிட்டால் என்னவாகும்?



உதாரணமாக, 170 கிராம் தோல் இல்லாத கோழியைச் சாப்பிட்டால், 284 கலோரிகள் நம் உடலில் சேரும் என்று அமெரிக்க வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கலோரிகளில் 80 சதவீதம் புரதத்திலிருந்தும் 20 சதவீதம் கொழுப்பிலிருந்தும் வருகிறது.

கோழியைத் தோலுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு சென்றடையும் கலோரிகளின் எண்ணிக்கை 386 ஆக இருக்கும். 50 சதவீத கலோரிகள் புரதங்களிலிருந்தும், 50 சதவீதம் கொழுப்புகளிலிருந்தும் வருகிறது.கூடுதல் கலோரிகள் மற்றும் கொழுப்பைச் சேர்க்க விரும்பவில்லை என்றால், சாப்பிடுவதற்கு முன் கோழியின் தோலை அகற்றுவது நல்லது.

மேலும், சமைக்கும் போது கோழித் தோல் இருப்பதால், கறிக்கு சரியான சுவையும், பதமும் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கோழி இறைச்சியை அறை வெப்பநிலையிலோ அல்லது வெந்நீரிலோ கரைக்கக் கூடாது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


கோழி இறைச்சி உலகில் மிகவும் சத்தான, பிரபலமான மற்றும் நுகரப்படும் உணவுகளில் ஒன்றாகும். ஆனால் இந்த உணவு விஷமாக மாற அதிக வாய்ப்புள்ளது.அதனால்தான், சரியாக சமைக்கப்படாத கோழியை சாப்பிட்டாலோ அல்லது மற்ற உணவுடன் பச்சை இறைச்சியை சாப்பிடாலோ , அந்த உணவு விஷமாகலாம்.



Trending News

Latest News

You May Like