1. Home
  2. ஆரோக்கியம்

நள்ளிரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

நள்ளிரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

இந்தக் கால கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. அதிலும் எடை அதிகரிப்பு அல்லது உடற் பருமன் போன்றவை நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஏற்பட வழிவகை செய்கிறது. குறிப்பாக தூக்கமின்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வர காரணமாகிறது.

இந்நிலையில் நள்ளிரவில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.இதன்படி நள்ளிரவில் சாப்பிடுவது உடலின் ஆற்றலைக் குறைக்கிறது ; பசியை மேலும் தூண்டச் செய்கிறது; கொழுப்பு திசுக்களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாமதமாக சாப்பிடுவது நமது உடலில் லெப்டின், கெர்லின் ஆகிய இரு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால், இது பசியைத் தூண்டி திசுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்கிறது.

இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கும். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில ...

பால்: இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் உள்ளது. இவை உடலுக்கு முக்கியமானவைதான். ஆனால், பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்கத் தாமதமாகும். இரவில் பால் அருந்துவதால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். சீரான தூக்கம் பாதிக்கப்படும்.

இறைச்சி: இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. இறைச்சி உணவுகள் ஜீரணமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ஆகையால், செரிமானக் கோளாறு ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும். வாய்வுத்தொல்லை உருவாகும்.

கீரை: கீரையை இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.

காபி மற்றும் டீ: டீ, காபியில் உள்ள ‘கேஃபைன்’ வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும். மேலும், காலை வேளைகளில் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். டீயில் இருக்கும் த்யோப்ரமைன்(Theobromine) மூளைக்குச் சுறுசுறுப்பை அளிக்கும். தூக்கத்தை விரட்டும். எனவே, இரவு நேரங்களில் காபி, டீயை தவிர்ப்பது நல்லது.

அதனால் இரவு நேரங்களில் தாமதமாகவோ அல்லது நள்ளிரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நள்ளிரவில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.







Trending News

Latest News

You May Like