1. Home
  2. ஆரோக்கியம்

தினமும் கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

தினமும் கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

நம்மில் பலர் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிக அளவு உள்ளது. கூடவே வைட்டமின் சி, லுடீன், ஜியாக்சாண்டின், வைட்டமின் கே காணப்படுகிறது.

கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது கேரட். வைட்டமின் ஏ குறைபாடு உலர் கண் எனப்படும் நோயை ஏற்படுத்துகிறது. இது சாதாரண பார்வையை பாதிக்கிறது. இரவில் அதிக பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது. கேரட்டில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் திறன் கொண்டது.

இந்த இரண்டு இயற்கை சேர்மங்களும் விழித்திரை மற்றும் லென்ஸைப் பாதுகாக்கின்றன. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஆப்தால்மாலஜி ஒரு வாரத்திற்கு இரண்டு கேரட்டுகளுக்கு மேல் சாப்பிடும் பெண்களுக்கு கேரட் சாப்பிடாத பெண்களை விட 64% குறைவான கிளௌகோமா எனப்படும் கண்களை குருடாக்கும் கண் நோய் ஆபத்து இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.


தினமும் கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.

ஒரு கப் கேரட்டில் மிக குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. ஆனால் அதிக அளவு ஊட்டச்சத்து இதில் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தொடர்ந்து உங்களுடைய உணவு பட்டியலில் கேரட்டை சேர்த்து வரலாம்.

கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.

தினமும் கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...


சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கேரட். கேரட் முகத்தில் ஏற்படக்கூடிய முகப்பரு, தோல் அழற்சி, சொறி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் காணப்படக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பி கரோட்டின் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தோலில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள், புள்ளிகளையும் தொடர்ந்து கேரட் சாப்பிடுவதன் மூலமாக குணப்படுத்த முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது கேரட். கேரட்டில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நுண்கிருமிகள் உடலில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வரும் பொழுது அது கரோனரி இதய நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. கேரட்டில் இருக்கக்கூடிய பொட்டாசியம் சோடியம் அடுக்குகளை சமநிலைப்படுத்தவும் உடலில் இருந்து அதை வெளியேற்றவும் உதவுகிறது. இதன் மூலமாக இதய ஆரோக்கியம் சீர்படும்.

கேரட் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் காணப்படுகிறது. இந்த இரண்டும் குறுகிய கால மற்றும் நீண்ட கால செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

Trending News

Latest News

You May Like