உங்கள் உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா ? இதை ஃபாலோ பண்ணுங்க!!

உங்கள் உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா ? இதை ஃபாலோ பண்ணுங்க!!
X

டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதால், தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை பழையபடி அதிகரிக்கவே ஆரம்பிக்கும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.தண்ணீர் பயிற்சி:

நம் உடலில் 75 சதவீதம் தண்ணீரினால் ஆனது. அதனால், தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். ஆனால், நாம் அதை பின்பற்றுவதே இல்லை. மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பையும் குறைந்து விடும்.

வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும். தினமும் இரவில் உணவு உண்ட பின் வெந்நீர் பருகவும். இது விரைவில் உணவினை செரிக்கச் செய்யும்.

எலுமிச்சை ஜூஸ்:

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை சாறு போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

உடலினை அழகாக்கும் தேன்:

இனிப்பு உணவு வகைகளை அதிகமாக உண்பதாலும், உடல் எடை அதிகரிக்கும். வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

இஞ்சி பூண்டின் மகத்துவம்:

நாம் சமைக்கும் உணவில் இஞ்சி, பூண்டு சேர்ப்பது வழக்கம். வெறும் மசாலா மணத்திற்கு மட்டுமே பயன்படும் இஞ்சி, பூண்டு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கவும் உதவுகின்றது. உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை பெறுவதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவையாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.

-டாக்டர். வி. ராமசுந்தரம்

Next Story
Share it