1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வெற்றிலையை சாப்பிடும் முறை..!!

இது தெரியுமா ? வெற்றிலையை சாப்பிடும் முறை..!!

பொதுவா வெற்றிலை வயிறு சம்மந்தமான-ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நல்ல தீர்வு. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கும் நல்ல மருந்தா இருக்கு. வெற்றிலைச் சாறோட (15 மி.லி) இஞ்சிச் சாறு (15 மி.லி) சேத்து நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்காக கொடுத்து வந்தா நல்ல பலன் இருக்கும். வெற்றிலைச்சாறோட கடுகளவு சுண்ணாம்பு கலந்து (சுண்ணாம்பின் அளவு அதிகமானால் தோலில் எரிச்சல் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க) குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல்) தொண்டக் குழியில போட்டா இருமல், சுவாசப் பிரச்சனைகள் நீங்கும். தீப்பட்ட புண் மேல வெற்றிலைய இடிச்சு கட்டி வெச்சா புண் அழற்சி குறையும். தலை வலி, மூட்டு வலி இருக்கும்போது வெற்றிலைச் சாற்ற தடவினா வலி நீங்கும்.

இந்த வெற்றிலை வேரை வாயில போட்டு அப்பப்போ சுவைச்சு வந்தா குரல் வளம் பெருகும்.

வெற்றிலையை சாப்பிடும் முறை

வாய் துர்நாற்றம்: தினமும் ஒரு வெற்றிலையை மென்றுவந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

மலச்சிக்கல்: 30 மி.லி. அளவு வெற்றிலைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் (அ) வெற்றிலையை இடித்து இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வரலாம்.

வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு: 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு பிரச்சனைகள் நீங்க, வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து கீழ்வாயில் வைக்கலாம்.

செரியாமை: 2-3 வெற்றிலையுடன் 4-5 மிளகுகள் சேர்த்து இடித்து தண்ணீரில் கலந்து கொடுக்க சிறுவர்களுக்கு செரியாமை பிரச்சனை தீரும்.

இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம்: வெற்றிலையை நல்லெண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின் மீது போட்டால் குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்) உண்டாகும் இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம் ஆகியவை தீரும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு: குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கவும், பால் கட்டியினால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டலாம்.


Trending News

Latest News

You May Like