1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியாம போச்சே..!! வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா?

இது தெரியாம போச்சே..!! வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா?

வெற்றிலை இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் பூஜைகளில் இது கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இது தெரியாம போச்சே..!! வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா?



வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். மேலும் வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. வெற்றிலையை உணவுக்கு பின் உண்டால் நல்ல செரிமானம் ஆகும். வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம், உணவு செரிமானத்துக்கும், சளி, கபம் போன்றவற்றுக்கு அருமருந்து. வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும்.

மேலும் வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இது தெரியாம போச்சே..!! வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா?

வெற்றிலையை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெற்றிலையின் உள்ளே ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் இருமல் பிரச்சனையை சமாளிக்கலாம். மேலும் இதை உட்கொள்வதால் தொண்டையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை அடிபட்ட உடல் காயத்திற்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. காயம் விரைவாகக் குணமடைய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் வழக்கத்தைவிட அதிகமாகக் காயம் குறைய உதவுகிறது.

ஈறுகளில் உள்ள வலி அல்லது வீக்கத்தை நீக்க வெற்றிலையும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம், ஈறுகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும் இது போன்ற பல பண்புகள் இதன் உள்ளே காணப்படுகின்றன.

வெற்றிலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால்,தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது கொழுப்புச் சத்தை குறைக்க உதவும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனால் வெற்றிலையையும் தினமும் உண்டு வந்தால் உடல் எடை சீராக வாய்ப்புகள் அதிகம்.

வெற்றிலையை மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இதன் இலைகளை மென்று உண்பதால் வாயில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும்.

வெற்றிலை முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. வெற்றிலையை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளித்து வாருங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய தலைமுடி உதிர்வு பிரச்சனை கட்டுப்படுத்தலாம்.

Trending News

Latest News

You May Like