வாய் புண் வந்துவிட்டதா ? கவலை வேண்டாம்..!! உங்களுக்கான சித்த மருத்துவ குறிப்புக்கள் இதோ..!!

வாய் புண் வந்துவிட்டதா ? கவலை வேண்டாம்..!!  உங்களுக்கான சித்த மருத்துவ குறிப்புக்கள் இதோ..!!
X

வாயில் புண் வந்து விட்டால் உணவு எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பேசுவது, தண்ணீர் குடிப்பது என்று எல்லாமே கஷ்டம் தான். நமது அன்றாட உணவு வகைகளிலேயே இதற்கான வைத்தியங்கள் இருக்கின்றன. அதுவும் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல். அந்த மாதிரியான இயற்கை உணவு வைத்திய முறைகளைப் பார்க்கலாம்…

வாய்ப்புண் குணமாக ;--தேங்காய் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.

நாக்கில்புண் ஆற ;-- அகத்திஇலையை அலசி சுத்தம் செய்து குடிநீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிடலாம்.

வாய்ப்புண்,வயிற்று புண் நீங்க ;-- மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.

வாய்ப்புண் ஆற ;-- காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளிக்கலாம்.

வாய் உள்ரணம் குணமாக ;-- தேங்காய்பாலை தினமும் கொப்பளித்து குடித்து வரலாம்.

வாய் வேக்காடு திற ;-- திருநீற்றுப்பச்சிலையை மெல்லுவதால் குணமாகும்.

தொண்டைக்கட்டு,தொண்டைகமறல் குணமாக ;-- மா இலை பச்சை இலையை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க குணமாகும்.

வாய்,நாக்கு புண்ணிற்கு ;-- பப்பாளிப்பாலை தடவலாம்.

வாய்ப்புண் ;-- ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் குணமாகும்.

வாய் கசப்பு ;--முருங்கைபூவை பருப்புடன் சமைத்து உண்ணலாம்.

வாய்ப்புண்,பல் வலி தீர;-- கொள்ளுக்காய் மற்றும் வேளை வேரை போட்டு கஷாயம் செய்து வாய் கொப்பளிக்கலாம்.

வாய்ப்புண் தீர;-- ரோஜாபூவை கஷாயம் செய்துகொப்பளிக்க தீரும்.

நாக்கு புண் குணமாக ;-- நெல்லி வேர்ப்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண் குணமாகும்.

Next Story
Share it