எந்த வயதிலும் தொப்பையைக் குறைக்க இதை செய்தால் போதும்..!!

எந்த வயதிலும் தொப்பையைக் குறைக்க இதை செய்தால் போதும்..!!
X

இன்றைய ஆண்களுக்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தன்னுடைய இளம்பருவத்தில் சும்மா கெத்தாக சிக்ஸ் பேக்ஸ் வைத்து கொண்டிருந்த இளைஞர்கள் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பூரி போல ஆகி விடுகிறார்கள் இவர்களில் உள் மாற்றத்திற்கு என்ன காரணம் தொப்பை வர காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

அனைத்து மக்களுக்கும் தொப்பையானது அதிகப்படியான கொழுப்பு அல்லது எடை அதிகரிப்பின் விளைவாக ஏற்படுவதில்லை. எடை அதிகரிப்பு முக்கிய காரணமாக கூறப்படுவது கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகள் மற்றும் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மொன்களின் வளர்ச்சியாககூட இருக்கலாம்.

காலை நேரத்தில் பருகும் காஃபியில் கூடுதலான க்ரீம்கள் அல்லது இனிப்புகளை சேர்ப்பது, செயற்கையான சுவையூட்டிகளை சேர்ப்பது போன்றவை உங்கள் வயிற்று பகுதியில் தங்கிக்கொள்கிறது. காலை உணவின்போது அதிகமான இனிப்பை சாப்பிடுவது அந்த நாள் முழுக்க இனிப்பு சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது. இதனால் நமது உடலின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு கலோரிகளை எரிக்க முடியாமல் போய் தொப்பை ஏற்படுகிறது. இதற்கு பதிலாக பிளாக் காஃபிகளை பருகலாம்.

பெரும்பாலும் நம்மில் பலருக்கு இந்த பழக்கம் இல்லை என்றே சொல்லலாம் அதுதான் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி எனலாம் ஒரு நபர் கலோரிகளை எரிப்பதை விட அதிக கலோரிகளை உட்கொண்டால், உங்களின் எடை அதிகரிக்கும்.நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்களின் வயிற்றின் அடிப்பகுதியில் இருக்கும் கொழுப்பு அதிகரிக்க தொடங்கும் இதான்லதான் தொப்பை திடீரென பெரிதாகிவிடுகிறது.ஓட்ஸ் காலை உணவிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இது நமது உடலுக்கு ஆற்றலை தருகிறது. இதிலுள்ள ப்ரோட்டீன், நார்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் வயிற்று பகுதியிலுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.நார்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் வயிற்றை நிறைவாக வைத்திருக்கிறது, அதனால் கூடுதலாக தின்பண்டங்கள் சாப்பிடும் எண்ணம் வராது. இதனால் நமது எடையும் கட்டுக்குள் இருக்கும், தேவையற்ற கொழுப்புகளும் உடலில் தங்காது.


ஓட்ஸ், பிரவுன் ரைஸ், குயினோ, கோதுமை பிரெட்டுகள் போன்ற முழு தானிய உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

குறைந்தது இரண்டு விதமான காய்கறிகளையாவது காலை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மைப் பயக்கும். காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், நார்சத்து அதிகமாகவும் இருக்கும், இது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை தருவதோடு, உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்குவதையும் குறைக்கிறது. முட்டைகளுடன் காய்கரைகளை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஊட்டமளிக்கிறது.

Next Story
Share it