உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இதை முதலில் படிங்க..!!

உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இதை முதலில் படிங்க..!!
X

நம்முடைய உடலில் உள்ள மிகவும் சிக்கலான ஒரு அமைப்பு சிறுநீரகம். இந்த சிறுநீரகத்தை நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மிகப்பெரிய அளவில் அதிக முயற்சிகளை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். மிக எளிய முறையில் ஒரு சில எளிய வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே போதும் உங்களுடைய சிறுநீரகம் மிகவும் ஆரோக்கியமாக எப்பொழுதும் இருக்கும்.

சிறுநீரகங்கள் நம்முடைய விலா எலும்பு கூட்டின் அடிப்பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அமைந்துள்ள சிறிய ஒரு உறுப்பு. இது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வடிகட்டி வெளியேற்ற உதவுகிறது. நம்முடைய சிறுநீரகங்களை பராமரிப்பது நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு முக்கியமானது. ஏனென்றால் சிறுநீரகங்கள் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படக்கூடிய கழிவுகளை இரத்தத்திலிருந்து சுத்தப்படுத்தும் முக்கிய பணியை செய்கிறது.பல நேரங்களில் மிகவும் அமைதியாக வேலை செய்து கொண்டிருக்கிற இந்த சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் நமக்கு தெரிவதில்லை. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் முற்றிய பிறகே நமக்கு தெரியவரும். கடைசி நேரத்தில் தெரியவரும் இந்த சிறுநீரக நோயால் எந்த பிரயோஜனமும் இல்லை. மிகப்பெரிய ஆபத்தான நிலையிலேயே நாம் அதை உணர தொடங்குகிறோம்.

இதற்கு மிகவும் எளிமையான ஒரு வழிமுறை வருடத்திற்கு ஒரு முறையாவது சிறுநீரகத்தில் ஏதாவது நோய்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது. மிக எளிதாக செய்யக்கூடிய இந்த ஆய்வு முறையை வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் சிறுநீரகத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் உடனடியாக அதை கண்டுபிடித்து நிவர்த்தி செய்து விடலாம். சிறுநீரகத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முக்கியமான ஒரு தேவை தண்ணீர்.

ஒரு நாளைக்கு 6 லிருந்து 8 கப் தண்ணீரை நீங்கள் குடித்து வரவேண்டும். அதுபோல சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நல்ல ஊட்டச்சத்துள்ள ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

மிக முக்கியமாக புகை பிடிப்பவர்கள் அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். நுரையீரலுக்கு மட்டுமல்ல சிறுநீரகத்திற்கும் மிகப்பெரிய எதிரி புகைபிடித்தல். நீரிழிவு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் போன்று அதிக உடல் எடையும் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கத் தொடங்கும். உணவுக் கட்டுப்பாட்டோடு தினசரி சரியான உடற்பயிற்சி செய்து வரும் பொழுது உடல் எடை அதிகரிக்காது.


அதுபோல் தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை தவிர்ப்பது உடல் எடையை குறைக்கும். இவை சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சனை தற்போது மக்களிடையே அதிகரித்து கொண்டே வருவதால் சிறுநீரக ஆரோக்கியம் குறித்து அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டே வரவேண்டும்.

தற்போதைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரக நோய் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மோசமான உணவு முறைகள் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. அதுபோல அதிக அளவு உணவு உண்பவர்கள் முறையான உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. சரியான உடற்பயிற்சியை நீங்கள் செய்து வரும் பொழுது நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அறிகுறிகளை குறைக்க தொடங்கலாம்.

சரியான அளவில் சிறுநீரகத்தை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால் டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை போன்ற மோசமான நிலைக்கு உங்களுடைய சிறுநீரகம் தள்ளப்படும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். தொடர்ந்து நீங்கள் தண்ணீர் அதிக அளவில் குடித்து வரும் பொழுது அது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தினமும் 8 கப் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலமாக சிறுநீரகத்தில் இருந்து சோடியம் மற்றும் பிற நச்சுக்களை வெளியேற்றுவதற்கு தண்ணீர் உதவுகிறது. இதனால் சிறுநீரக நோய் அபாயத்தை மிகப்பெரிய அளவில் இது குறைக்கிறது. புகைப்பிடிக்கும் போது அது இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. அல்லது இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது.

இதனால் இது சிறுநீரகத்தில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. புகைபிடித்தல் சிறுநீரக செல் புற்று நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு ஏதாவது உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் அடிக்கடி தொடர்ந்து சிறுநீரகத்தை பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளவர்களும் இதை செய்யவேண்டும்.

நீரிழிவு நோயாளிகள், குறைந்த எடையுடன் பிறந்தவர்கள், இதய பிரச்சனைகள் இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருப்பவர்கள், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி உங்களுடைய சிறுநீரகத்தை பரிசோதனை செய்ய வேண்டும். அதுபோல மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் சிறுநீரக பிரச்சனை ஏற்படும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் உங்களுடைய உடல் வலிக்காக நீங்களாகவே பயன்படுத்தக்கூடிய வலிநிவாரணிகள் சிறுநீரகத்தை மிக வேகமாக சேதப்படுத்தும். ஆகையால் இந்த விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொழுது உங்களுடைய சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் மிக கடினமான விஷயங்கள் எதுவும் இல்லை.

எளிதாகவே உங்களால் செய்யக்கூடிய விஷயங்கள் மட்டுமே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, உங்களுடைய சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என நீங்கள் நினைத்தால் இந்த எளிய வழிமுறைகளை தொடர்ந்து நீங்கள் பின்பற்றி வந்தாலே போதும் உங்களுடைய சிறுநீரகம் மட்டுமல்லாமல் மொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் நொடியின்றி நீண்ட காலம் சந்தோஷமாக வாழலாம்.

Next Story
Share it