தயவு செய்து இந்த உணவை முட்டையுடன் சேர்த்து சாப்பிடாதீங்க..!!

தயவு செய்து இந்த உணவை முட்டையுடன் சேர்த்து சாப்பிடாதீங்க..!!
X

நாம் தினமும் சாப்பிடும் முட்டையுடன் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சோயாபால் மற்றும் முட்டை

பலரும் காலை நேரத்தில் சோயா பாலையும் முட்டையையும் சேர்த்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்கு தெரியாமல் இப்படி உண்கிறார்கள். இது நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது கூடவே உடல்சிதைவு பிரச்சனையை ஏற்படுத்துமாம்.

வாத்து இறைச்சி மற்றும் முட்டை

முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும் காரணிகளும் அதிகம் உள்ளது. முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும் காரணிகளும் உள்ளது. ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். முயல் இறைச்சியிலும் இந்த காரணிகள் இருப்பதால் முட்டையும் முயல் இறைச்சியும் சாப்பிட்டாலும் இதே பிரச்சனைகள் ஏற்படும்.

டீ , தேநீர் மற்றும் முட்டை

நம்மில் பலரும் டீ,மற்றும் தேநீர் உடன் முட்டை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். இப்படி சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தை சீர்கெடுக்கும் என பலருக்கும் தெரிவதில்லை.

ஏனெனில் தேயிலை இலைகளில் உள்ள டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதங்களுடன் இணைந்து டானிக் அமில புரதச் சேர்மத்தை உருவாக்கி பெரிஸ்டால்சிஸின் செயல்பாட்டைக் குறைத்து குடல் பாதையில் மலத்தை சேமிக்கும் நேரத்தை நீடிக்கும், இது மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் முட்டை

உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டங்களை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களை கொண்டு உணவுப்பண்டகளை தயாரித்து உண்பது செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை உண்டுபண்ணும்.

சர்க்கரை மற்றும் முட்டை

முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து அதை சமைத்த பிறகு முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். மேலும், நச்சுத்தன்மையுள்ள இந்த சேர்மத்தை உறிஞ்சுவது மிகவும் கடினம், மேலும் இரத்தம் உறைந்து போகும்

பழங்கள் மற்றும் முட்டை

ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, பிளம்ஸ், ஆப்ரிகாட் , மற்றும் தர்பூசணி போன்ற பழங்களுடன் முட்டை உள்ளிட்ட புரதப் பொருட்களுடன் சாப்பிட அறிவுறுத்தப்படுவதில்லை.முட்டை மற்றும் பழங்களின் செரிமானத்தின் வேகத்தில் உள்ள வேறுபாட்டால் இதை சேர்த்து சாப்பிட கூடாது. பழங்கள் உட்கொண்ட 15 நிமிடங்களுக்குப் பிறகுதான் செரிக்கப்படுகின்றன, ஆனால் முட்டைகள் பழங்களை விட அதிகநேரம் செரிமானத்திற்கு எடுத்துக்கொள்கிறது. இவை இரண்டும் சேர்த்து சாப்பிடும் பொழுது உங்கள் வயிற்றில் என்ன நடக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

Next Story
Share it