1. Home
  2. ஆரோக்கியம்

அடேங்கப்பா.. நாம் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கில் இவ்வளவு விஷயம் இருக்கா..?

அடேங்கப்பா.. நாம் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கில் இவ்வளவு விஷயம் இருக்கா..?

உருளைக்கிழங்கு சுமார் 7,000-10,000 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஸ்பானியர்களால் உருளைக்கிழங்கு அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று அவை உலகின் பல பகுதிகளில் பிரதான உணவாக இருந்துவருகிறது.

2014 ஆம் ஆண்டில் உருளைக்கிழங்கு சோளம், கோதுமை மற்றும் அரிசிக்குப் பிறகு உலகின் நான்காவது பெரிய உணவுப் பயிராக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து இப்போது 5,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான உருளைக்கிழங்குகள் உள்ளன.

தற்போது உலகளவில் பயிரிடப்படும் உருளைக்கிழங்கில் 99% க்கும் அதிகமானவை தென்-மத்திய சிலியின் தாழ்நிலங்களில் தோன்றிய வகைகளில் இருந்து வந்தவை.



2018 இன் ஒட்டுமொத்த உற்பத்தியில் சீனாவும், இந்தியாவும் உலகில் முன்னணியில் உள்ளன. இப்பொழுது உலகில் அதிக அளவில் உருளைக்கிழங்கை உற்பத்திசெய்வது சீனா. அதிகஅளவில் ஏற்றுமதி செய்வதும் சீனாதான். அதையடுத்து இந்தியா, ஜெர்மனி, உக்ரைன், ரஷ்யா, போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னணி உற்பத்தியாளர்களாக உள்ளன.

உருளைக்கிழங்கு வயிறு, மண்ணீரல் மற்றும் குடல்களுக்கு நல்லது. அவை இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் மற்றும் திரவ சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.

உருளைக்கிழங்கு மதுபானங்களை தயாரிக்கவும் பயன்படுகிறது. வோட்கா, அக்வாவிட் அல்லது பாய்டின் போன்ற சில வகையான மதுபானங்களை தயாரிக்கவும் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறார்கள்.

உருளைக்கிழங்கு சிறந்த ஒரு காலை உணவாக உணவு வல்லுநர்களால் சொல்லப்படுகிறது. உருளைக்கிழங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் காலை உணவாக உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனென்றால் இது ஒரு நாள் முழுவதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான எல்லா தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பச்சை தண்டுகள் விஷத்தன்மை கொண்டது. இந்த பாகங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த சோலனைன் உள்ளது. இதைச் சாப்பிட்டால் வயிற்று வலி, காய்ச்சல், குமட்டல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தெரிய 8 லிருந்து 10 மணி நேரம் வரைக்கும் ஆகும்.


அடேங்கப்பா.. நாம் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கில் இவ்வளவு விஷயம் இருக்கா..?

உருளைக்கிழங்கை குளிர்ந்த, வறண்ட இடங்களில் வைப்பது சிறந்தது. ஈரப்பதம் இல்லாத இருண்ட இடங்களில் உருளைக்கிழங்கை சேமித்து வைத்திருந்தால் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். 45-50 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்தால் உருளைக்கிழங்கு மூன்று மாதங்கள் வரை அழுகி போகாமல் இருக்கும். சரியான வெப்பநிலையில் இருந்தால் உருளைக்கிழங்கு ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பிக்கும்.

உருளைக்கிழங்கை தண்ணீரில் வேக வைக்கும் பொழுது தோலோடு சேர்த்து வேக வைத்தால் மட்டுமே அதனுடைய ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும். உருளைக்கிழங்கை உரித்து தண்ணீரில் வேக வைத்தால் அதனுடைய சத்தான ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கரைந்து விடும்.

உருளைக்கிழங்கு கடல் மட்டத்திலிருந்து 15,420 அடி உயரத்தில் கூட வளரக்கூடியது.

உருளைக்கிழங்கை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் நம்முடைய உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் இதில் உள்ளது.

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தினமும் குறைந்தது ஒரு உருளைக்கிழங்கு சாப்பிடுகிறார்கள். ஜெர்மானியர்கள் வருடத்திற்கு 90 கிலோ அளவிற்கு உருளைக்கிழங்கு சாப்பிடுகிறார்கள்.

நீல வயலட் நிறத்தில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரான்சில் பயிரிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தேசிய உருளைக்கிழங்கு தினமாக கொண்டாடப்படுகிறது.

Trending News

Latest News

You May Like