மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! உங்கள் உடலில் ஏற்படும் வலியை குறைக்கும் மூச்சுப் பயிற்சிகள்..!!

மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! உங்கள் உடலில் ஏற்படும் வலியை குறைக்கும் மூச்சுப் பயிற்சிகள்..!!
X

நம் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால் உடனடியாக ஓடி சென்று மாத்திரை வாங்கி அந்த வலியை நிவர்த்தி செய்கிறோம். ஆனால் இப்படி உடலில் ஏற்படக்கூடிய வலிகளுக்கு நீங்கள் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டு வந்தால் அது சிறந்த ஒரு தீர்வாக அமையாது. தொடர்ந்து எடுக்க கூடிய மருந்துகள் வேறுபல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

தொடர்ந்து மருந்துகளை உட்கொள்வதற்கு பதிலாக சுவாசப்பயிற்சி உங்களுக்கு சிறந்த ஒரு மாற்றாக அமையும். சுவாசப்பயிற்சி என்பது உங்களுடைய மனதை அமைதிப்படுத்தவும், நுரையீரலை வலுப்படுத்தவும் மட்டுமல்ல, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் வலி ஏற்பட்டுள்ள இடங்களில் இருக்கக்கூடிய தசைகளின் இறுக்கத்தை தளர்த்தும். அந்த நேரத்தில் இந்த பகுதிகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்களுடைய வலி மிக வேகமாக இயற்கையாக எளிதில் குறையும்.சுவாச ரகசியம்

இந்த மூச்சுப் பயிற்சி மிகவும் எளிமையானது ஆனால் அதிக சக்தி கொண்டது. வசதியாக உட்கார்ந்து உங்களுடைய கைகளை அடிவயிற்றில் வைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு முறை சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள். இப்பொழுது பயிற்சியை ஆரம்பிக்கலாம். முதலில் உங்களுடைய மூக்கு வழியாக நான்கு வினாடிகள் காற்றை உள்ளிழுங்கள். உள்ளிழுத்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு தொடர்ந்து அப்படியே வைத்திருங்கள்.

ஏழு வினாடிகளுக்கு பிறகு மூச்சுக் காற்றை வாய் வழியாக 8 விநாடிகள் வெளிவிடுங்கள். தொடர்ந்து இதை ஒரு சில நிமிடங்கள் செய்ய வேண்டும். இந்த எளிய தந்திரம் உங்களுடைய மனதை நிதானப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கவும், தசை வலியிலிருந்து நிவாரணத்தை கொடுக்கவும், வேகமாக நிம்மதியாக தூங்கவும் உதவுகிறது.

உதரவிதான சுவாச நுட்பம்

முதலில் சமதளமான ஒரு தரையில் படுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முழங்கால்களுக்கும், தலைக்கும் கீழே ஒவ்வொரு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒரு கையை வயிற்றில் தொப்புளுக்கு மேல் பகுதியிலும் மற்றொரு கையை மார்பிலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை சமநிலைப்படுத்தி மூக்கு வழியாக இரண்டு வினாடிகள் காற்றை உள்ளிழுத்து காற்று உங்களுடைய வயிற்றைக்கடந்து அடிவயிற்றில் எவ்வாறு நுழைகிறது என்பதை அனுபவித்து உங்கள் வாய் வழியாக இரண்டு வினாடிகள் மூச்சுக் காற்றை வெளியே விடுங்கள்.
வயிற்றில் இருக்கக்கூடிய எல்லா காற்றும் இந்த நேரத்தில் வெளியேற வேண்டும். இது உங்களுடைய இதயத்துடிப்பை குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. பதட்டமான தசைகளை தளர்த்துகிறது. மன சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. வயிற்று தசைகளை லேசாக்குகிறது.


சுவாசத்தை சமநிலைப்படுத்துதல்

ஒரு அமைதியான இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடி உங்களை சமநிலைப்படுத்த சுவாசத்தை நன்றாக இழுத்து வெளிவிடுங்கள். இப்பொழுது பயிற்சியை ஆரம்பிக்கலாம். உங்களுடைய மூக்கு வழியாக நான்கு வினாடிகள் மூச்சுக் காற்றை மெதுவாக உள்ளிழுங்கள். உள்ளிழுத்த மூச்சு காற்றை நுரையீரலில் ஒரு சில வினாடிகள் அப்படியே வைத்திருங்கள்.

பிறகு உங்களுடைய மூக்கு வழியாக நான்கு வினாடிகள் மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள். தொடர்ந்து இந்த பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும். இந்த எளிய சுவாச பயிற்சி உங்களுடைய மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், தசைகளை தளர்த்தவும் உதவுகிறது.

தொடர்ந்து இந்த சுவாச பயிற்சிகளை நீங்கள் செய்து வரும் பொழுது உங்களுடைய மன அழுத்தம் மட்டுமல்லாமல் உடலில் ஏற்பட்டிருக்கும் எல்லா வலிகளும் பறந்தோடும். காரணம் இந்த எளிய பயிற்சிகள் உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய தசைகளை தளர்த்தி இலகுவாக்குகிறது. அந்த இடங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய வலியும் உடனடியாக குறையும். ஆகையால் இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் பொழுது உங்களுடைய உடல் வலி மிக வேகமாக குறையும்.Next Story
Share it