1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இந்த உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்குமாம்..!!


உடல் எடையை குறைக்க நீங்கள் தினமும் குறைவான கலோரி கொண்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால் நாம் தெரியாமல் சாப்பிடும் சில உணவுகள் உடல் எடையை அதிகரிக்கின்றன. அப்படி எந்தெந்த உணவுகள் எடையை அதிகரிக்கின்றன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உலர்ந்த பழங்கள்

உலர் பழங்கள் உலர்த்த படுவதால் இதில் உள்ள நீர்சத்துகள் வெளியேறி விடுகிறது. இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கும். ஆகவே உலர்ந்த பழங்களை சாப்பிடுவதை விட அதே அளவு பிரஷ் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் உலர் பழங்களில் சாதாரண பழங்களை விட 5 முதல் 8 மடங்கு அதிக கலோரிகள் உள்ளது. ஆகவே உலர்ந்த பழங்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.





சால்மன் மீன்

சால்மன் மீன்கள் சாப்பிடுவதால் முடி, தோல், மூட்டுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா – 3 ஆகியவை நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை தந்தாலும் கொழுப்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் கலோரி மிக அதிகம். ஆகவே இதனை அதிகம் எடுத்துக்கொள்ளுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.


இது தெரியுமா ? இந்த உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்குமாம்..!!



அவகேடா

ஒருவரின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிகச் சிறந்த பங்கு வகிப்பது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தில் சுமார் 250 கலோரிகள் உள்ளன. எனவே, இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உங்கள் எடை அதிகரித்து விடும். ஆகவே எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை குறைந்த அளவில் சாப்பிடுவது சிறந்தது.

நட்ஸ்

பாதாம், பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. மேலும் இதில் அதிக அளவில் கலோரிகளும் உள்ளது. அதாவது 28 கிராம் பாதாமில் சுமார் 160 கலோரி உள்ளது. ஆகவே உங்களுக்கு எடை குறைய வேண்டுமானால் குறைவான அளவில் நட்ஸ் வகைகளை சாப்பிடுவது சிறந்தது.



வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றன. அதுமட்டு மல்லாமல் பலவிதமான நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது. ஆனால் ஒரு பெரிய வாழைப்பழத்தில் சுமார் 105 கலோரிகள் உள்ளன. இந்த பழங்களில் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை எளிதில் அதிகரித்து விடும். ஆகவே இப்படிப்பட்ட வாழைப்பழங்களை தவிர்ப்பது நல்லது.


Trending News

Latest News

You May Like