வாங்க தெரிந்து கொள்வோம் - பெண்களுக்கு வலது கண் துடித்தால் இத்தகைய பலனா?

வாங்க தெரிந்து கொள்வோம் - பெண்களுக்கு வலது கண் துடித்தால் இத்தகைய பலனா?
X

ஜோதிட கலையில் ஜாதகத்தை கணித்து பலன் கூறுதல், கைரேகை சாஸ்திரம், எண் கணித சாஸ்திரம் உள்ளிட்டவைகள் அனைத்தும் எதிர்காலத்தில் நமக்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே ஓரளவு தெரிந்து கொள்ள உதவும் வழிமுறைகள் ஆகும்.

சில நேரங்களில் நமது உடலின் சில பாகங்களில் அசாதாரணமான நிலையில் துடிப்புகள் ஏற்படும். இத்தகைய துடிப்புகள், நமக்கு நிகழ இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை உணர்த்தும் அறிகுறிகளாக பெரும்பான்மையான மக்களால் கருதப்படுகிறது.

கண்கள் துடித்தல்

ஆண்களுக்கு வலது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டாலும், பெண்களுக்கு இடது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டதால் அவை நற்பலன்கள் ஏற்படபோவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. அதுவே ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி.

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் விரைவில் தீரும்.வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.
Next Story
Share it