1. Home
  2. ஆரோக்கியம்

உங்களுக்கு தாங்க முடியாத பல் வலி வந்தா... இதைச் செய்து பாருங்க!!

உங்களுக்கு தாங்க முடியாத பல் வலி வந்தா... இதைச் செய்து பாருங்க!!

பல் வலிக்கு முக்கிய காரணம் பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கும் இனிப்பாகவோ, குளிர்ச்சியாகவோ, சூடாகவோ சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்படும். இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்கும். அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படலாம்.

வீட்டிலிருந்தே எளிமையான வழிகளில் பல் வலியை தீர்க்கலாம்.பல்வலியில் ஆரம்பித்து தலைவலியாக மாறி குத்த ஆரம்பிக்கும். இதற்கு ஒரு சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் போதும். தலைவலியுடன் பல்வலியிலிருந்தும் விடுபடலாம்.

பல்வலி ஆரம்பகட்டத்தில் இருக்கும் பட்சத்தில் சின்ன வெங்காய சாறை மென்று விழுங்கினாலே போதுமானது.


உங்களுக்கு தாங்க முடியாத பல் வலி வந்தா... இதைச் செய்து பாருங்க!!

பஞ்சில் கிராம்பு எண்ணெய் தோய்த்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்தால் உடனடி நிவாரணத்தைப் பெற முடியும்.வெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம்.தாங்க முடியாத வலியாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து மென்று அதன் சாறு பட்டு வலி குறைய ஆரம்பிக்கும்.

பல் வீக்கத்திற்கு பாக்கெட் டீ பேக்கை சூடான தண்ணீரில் வைத்து எடுத்து வீக்கம் உள்ள இடத்தில் வைக்க விரைவில் சரியாகும்.


உங்களுக்கு தாங்க முடியாத பல் வலி வந்தா... இதைச் செய்து பாருங்க!!

பூண்டு பற்களை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்கவும். , இதன் காரணமாக பல் வலி பறந்துவிடும். ஏனெனில், பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பூண்டில் காணப்படுகின்றன. இது பற்களில் இருக்கும் கிருமிகளை நீக்கி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

கொய்யா இலைகளில் ஆன்டி மைக்ரோபியல் பண்பு உள்ளது. எனவே, கொய்யா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வலி ஏற்பட்டால், கொய்யா இலைகளை பல் வலி உள்ள இடத்தில் மெல்லத் தடவுங்கள், படிப்படியாக நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். இது தவிர, கொய்யா இலைகளை வேகவைத்து வடிகட்டி, அந்த தண்ணீரை வாய் கழுவி பயன்படுத்தலாம்.

மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புள்ள பொருள். இதை தூள் உப்புடன் சேர்த்து தொடர்ந்து பற்களை தேய்த்து, மசாஜ் பண்ணுவதுபோல் தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்து வந்தால் பற்கூச்சம் நீங்கும்.

பேக்கிங் சோடா எப்பேற்பட்ட வீக்கத்தில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பல் வலியை உண்டாக்கும் தொற்றுக்களை சரிசெய்யும். அதற்கு நீரில் நனைத்த பஞ்சுருண்டையை பேக்கிங் சோடாவில் தொட்டு, வலியுள்ள இடத்தில் வையுங்கள். இல்லாவிட்டால், நீரில் பேக்கிங் சோடாவை கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளியுங்கள்.



Trending News

Latest News

You May Like