1. Home
  2. ஆரோக்கியம்

கர்ப்ப கால உணவுமுறை

கர்ப்ப கால உணவுமுறை


பொதுவாக தாய்மைப் பருவம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கியமான பருவம். அந்த பருவத்தில் அவர்களை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களை சுற்றி இருப்பவர்களின் கடமையாகும். 

அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். இதற்காக உணவு பழக்க வழக்கங்களில் சில மாறுதல்கள் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இந்த நேரத்தில் பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் கர்ப்ப காலம் மிகவும் சோதனையான காலக்கட்டமும் ஆகும்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஊட்டச்சத்து தேவை அதிகரிக்கும்.இந்த சமயத்தில் பெண்கள் இருவருக்காக சாப்பிடுகிறார்கள் என்ற கூறுவது வழக்கம். அது உண்மைதான். தாய் சாப்பிடும் இட்லியில் ஒரு துண்டு நேரடியாக குழந்தைக்கு கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக தாய் உண்ணும் இட்டிலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தம் மூலம் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு  கிடைக்கின்றன.

குழந்தைகளின் தசை,எலும்பு, நரம்பு ஆகிய திசுக்கள், இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் தாயிடம் இருந்து வரும் ஊட்டச்சத்துக்கள் தான் உதவியாக அமைகிறது.

அதன்படி Green leaves – பச்சைக்கீரை வகைகள்,Green vegetables – பச்சைக் காய்கறிகள்,Grains – முழு தானியங்கள் போன்ற டிரெயின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல சக்தி மிகுந்த சத்துக்களை தாய்க்கும் குழந்தைக்கும் தரும். கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்கள் தினமும் அரை லிட்டர் பாலாவது குடிக்க வேண்டும் அது கருவில் இருக்கும் குழந்தைக்கு கால்சியம் சத்தை அள்ளித் தருகிறது. 

கர்ப்ப  காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் உணவில் கூடுதலாக 0.5 கிராம் புரதம், அடுத்த மூன்று மாதங்களுக்கு 6.9 கிராம் புரதம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசி மூன்று மாதங்களில் 22.7 கிராம் புரதம் கூடுதலாக சேர்க்க வேண்டும்.

பால் குழந்தையின் எலும்புக்கு வலு சேர்க்கும்.கருவுற்ற தாய்க்கு நாக்கின் ருசி போகும் எனவே சாம்பல், மாங்காய் போன்ற புளிப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் அதிகம் பிடிக்கிறது. அதுபோக கடலைமிட்டாய் ,எள்ளுருண்டை போன்ற சத்துமிக்க தின்பண்டங்களை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

வயிறு நிறைய சாப்பிட்டால் குழந்தை எடை அதிகமாகும் பிரசவகாலத்தில் சிரமம் ஆகும் என்றெல்லாம் எண்ண வேண்டாம்.எந்த ஒரு சந்தேகம் ஏற்பட்டாலும் யார் சொல்லையும் கேட்காமல் முறைப்படி மருத்துவரின் ஆலோசனை பெற்று நடப்பது மிகவும் சிறந்தது. 

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததை கூறுவர் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் வட்டத்திற்குள் இருப்பது கருவுற்ற தாய்மார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like