1. Home
  2. ஆரோக்கியம்

அடேங்கப்பா..!! முளைக் கீரையில் இவ்வளவு விஷயம் இருக்கா ?


முளைக் கீரை வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும். முளைக்கீரையானது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

  • முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவையூட்டுவது மட்டுமல்லாமல் பசியையும் தூண்டுகிறது.
  • முளைக்கீரையை நன்கு கழுவிச் வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் பின்பு கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.
  • முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது.
  • முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும்.
  • முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
  • முளைக் கீரைச் சாற்றில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அதை அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.
  • முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
  • முளைகீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
  • முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் சொறி, சிரங்கு முதலிய தோல் நோய்கள் குணமாகும்.
  • முளைக் கீரையானது இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் உதவுகிறது..
  • முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  • முளைக்கீரையானது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • மூளை கீரை கண் எரிச்சல், கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றையும் குணமாக்கும்.

Trending News

Latest News

You May Like