1. Home
  2. சினிமா

வணங்கான் படப்பிடிப்பின் போது சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல்..!!

வணங்கான் படப்பிடிப்பின் போது சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல்..!!

இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர் பாலா. 1999-ல் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த பாலா, வணங்கான் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவர் இப்படத்தை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் தொடங்கினார். இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி கடந்தாண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரியில் ஷூட்டிங்கையும் நடத்தினர்.


வணங்கான் படப்பிடிப்பின் போது சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல்..!!

அங்கு ஒரு மாதம் ஷூட்டிங் முடிந்த பின்னர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் இருவரும் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டதாக சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, அறிக்கை வெளியிட்ட பாலா, வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். வணங்கான் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களினால் இக்கதை சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என எண்ணுகின்றேன். இக்கதையின் மீதும், என் மீதும் சூர்யா மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார். அதை நான் கெடுக்க விரும்பவில்லை. எனவே இப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக நாங்கள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம் என தெரிவித்து இருந்தார்.

இதன் பின் சூர்யா நடித்த கேரக்டரில் நடிகர் அருண் விஜய் கமிட்டாகி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.


வணங்கான் படப்பிடிப்பின் போது சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல்..!!

இந்த நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், துணை நடிகை லிண்டா ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் சம்பளத்தை கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஜிதன், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like