மாஸாக வெளியான ‘கப்ஜா’ பட ட்ரைலர்..!!
கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருககிறார். இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே. ஜி எஃப் படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகிறது.பீரியட் ட்ராமா படமான இதில் உபேந்திரா இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது