மாணவ மாணவியரின் பட்டியலை சேகரிக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு..!!
+2 வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் இருபதாம் தேதிக்குள் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அதே போல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் பட்டியலை இந்த மாதம் முப்பதாம் தேதிக்குள் தயார் செய்து ஒப்படைக்குமாறு நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியருக்கு தேவைப்படும் அடுத்தக் கட்ட படிப்பிற்கான ஊக்கத்தொகையோ அல்லது நிதி உதவிகளையோ செய்வதற்காக இந்த பட்டியல் தயார் செய்து வருவதாகவும், இந்த உதவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக இந்திய தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததும் அதேபோல் ஒவ்வொரு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சேகரிக்க படிவம் அனுப்பியிருந்தார்.
அதேபோல் கடந்த வாரம் ‘விலையில்லா விருந்தகம்’ நடத்தும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பணத்தொகை ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் இரு தினங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பால், முட்டை, ரொட்டி” திட்டம் போன்றவற்றை முறைப்படி செய்யாத மாவட்டங்கள் முறையாக வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு நலத்திட்டங்களை வழங்குவதற்காக நடிகர் விஜய் தொடர்ந்து செயல்பட்டு வருவது அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.