1. Home
  2. சினிமா

மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் வீடியோ!!

மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் வீடியோ!!

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியிடம் இந்தியில் பேசாதீர்கள், தமிழில் பேசுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனியார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். இருவரும் மேடையில் நின்று கொண்டிந்த போது, சாய்ரா பானு பேச அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது.

அப்போது உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள்’ எனக் கூறினார். இதனால் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.


மனைவியை இந்தியில் பேச வேண்டாம் என கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் வீடியோ!!


பின்னர், சாய்ரா பானு, தன்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. எனவே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள் என்று ஆங்கிலத்தில் பேசினார். தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

காரணம் தனது கணவரின் குரல் மிகவும் பிடிக்கும் என்றும், அவரது குரலை நேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மீதுள்ள பற்றை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Trending News

Latest News

You May Like