1. Home
  2. சினிமா

புது கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்!....

புது கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்!....

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கடந்தாண்டு வெளியான 'சாணிக் காயிதம்' திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. அதே போல் தெலுங்கில் 'சர்காரு வாரி பாட்டா', மலையாளத்தில் 'வாஷி' உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.


புது கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்!....



இதையடுத்து தெலுங்கில் நானியுடன் 'தசரா' படத்திலும், தமிழில் 'மாமன்னன்' படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இரண்டு படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு 'ரிவால்வர் ரீட்டா' என பெயரிப்பட்டுள்ளது.

சந்துரு இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like