பரபரப்பு! பிரபல பாலிவுட் நடிகருக்கு கொலை மிரட்டல்!!
மின்னஞ்சல் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சல்மான் கான் என்றால் மான் வேட்டை வழக்கு மிக பிரபலம். 1998ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சல்மான் கான், மானை வேட்டியாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவர்மீதான இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், சல்மான் கானின் அலுவலகத்துக்கு மோகித் கர்க் என்பவரின் பெயரில் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்த நேர்காணலை சல்மான் கான் பார்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ள கோல்டி பிரார் என்பவரை சந்தித்துப் பேச வேண்டும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிஷ்னோய் அளித்த நேர்காணல் ஒன்றில் மானை வேட்டையாடியதற்காக பிகானிரில் உள்ள தங்களது கோயிலுக்கு சென்று சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், சல்மான் கானை கொல்வதே தனது வாழ்க்கையின் லட்சியம் என்றும் கூறியுள்ளார்.
இந்த மின்னஞ்சல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, லாரன்ஸ் பிஷ்னோய், கனடாவைச் சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் உள்ளிட்ட 3 பேர் மீது பாந்த்ரா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மும்பையில் உள்ள சல்மான் கானின் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
newstm.in