1. Home
  2. சினிமா

நடிகரும் இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

நடிகரும் இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் மனோபாலா.இவர் ஆரம்பத்தில் ‘ஆகாய கங்கை, பிள்ளை நிலா, சிறைப்பறவை, ஊர்க்காவலன், மூடுமந்திரம், கருப்பு வெள்ளை, பாரம்பரியம்’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இயக்கியுள்ளார். அத்துடன் நடிகர் வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன் ,சத்யராஜ், கார்த்திக்கு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் நடிகர் மனோபாலா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் , பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். என்று பதிவிட்டுள்ளார்.



Trending News

Latest News

You May Like