தியேட்டரில் நடந்த தீண்டாமை செயல் : பிரபல திரையரங்கு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு..!!
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையங்கில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரை திரையரங்குக்குள் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் பிரபலங்கள் பலரும் இந்த தீண்டாமை செயலை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சிம்பு ரசிகர்கள் வழங்கிய டிக்கெட்டை வைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றபோது திரையரங்கின் ஊழியர் தங்களுக்கு அனுமதி மறுத்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தினரைப் படம் பார்க்க அனுமதி மறுத்த டிக்கெட் பரிசோதகர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.