தி கேரளா ஸ்டோரி படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!
சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள படம் 'தி கேரள ஸ்டோரி'.இந்த படத்திற்கு அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுப்பக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
பிரதமர் மோடி முதல் வானதி ஸ்ரீனிவாசன் வரை தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்கிற சூப்பரான வசனத்தை கையாண்டு வரும் நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பது போல ப்ளூ சட்டை மாறன் அப்போ அந்த பிபிசி ஆவணப் படம் மற்றும் காட்மேன் உள்ளிட்ட படங்களை ஏன் தடை செய்யணும் அதையும் ரிலீஸ் செய்யலாமே என கேள்வி எழுப்பி உள்ளார். அல்லா பெரிய கடவுள் என்று சொன்னாலே இந்து பெண்கள் மதம் மாறிவிடுவார்களா?
நர்சிங் படிக்கும் பெண்களுக்கு டாக்டர் படிக்கும் இஸ்லாமிய நபர்கள் பாய் ஃபிரெண்டாக கிடைத்தால் பெரிய இடத்தில் செட்டில் ஆகி விடலாம் என லவ் ஜிகாத்தில் சிக்கி மதம் மாறி விடுகின்றனரே இந்து பெண்களை இவ்வளவு மோசமாக காட்டியதற்கு அந்த இயக்குநரை கண்டித்து இந்து அமைப்பினர் தான் போராட்டங்களை நடத்த வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் சாட்டையை சுழற்றி இருக்கிறார்.
தி கேரளா ஸ்டோரி கதை, அந்த படம் செய்யும் இஸ்லாமிய விரோதத்துக்கு எதிரான பிரச்சாரங்களை எல்லாம் விட்டு விடுவோம்.படமாகவாது நல்லா இருக்கான்னு பார்த்தா, அதுவும் இல்லையே என பளிச்சென சொல்லி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். ஆப்கானிஸ்தானை காட்டுறாங்க, ஆனால், அங்கே என்ன பண்றாங்க இந்த பெண்ணை கடத்திக் கொண்டு என்ன செய்யுறாங்க என்றெல்லாம் காட்டவே இல்லை.
காதலிப்பவன் ஒருத்தன் கட்டிக் கொள்பவன் ஒருத்தன் எல்லாத்துக்கும் அந்த பெண் பூம்பூம் மாடு மாதிரி எப்படித்தான் தலையாட்டுதோ தெரியல என விமர்சித்துள்ளார்.