1. Home
  2. சினிமா

தமிழ்ப்படங்களை வாங்கிக்குவித்த நெட் ஃபிளிக்ஸ்!!

தமிழ்ப்படங்களை வாங்கிக்குவித்த நெட் ஃபிளிக்ஸ்!!

இந்த ஆண்டு வெளியாக உள்ள பல தமிழ்ப்படங்களை நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து மெகா ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் பி.வாசு இயக்குகிறார். கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப்படத்தை நெட் ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்நடிப்பில் உருவாகவுள்ள அஜித் 62 திரைப்படத்தையும் வாங்கியுள்ளது நெட் ஃபிளிக்ஸ். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அஜித் 62 வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.


தமிழ்ப்படங்களை வாங்கிக்குவித்த நெட் ஃபிளிக்ஸ்!!


ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் ஆகிய படங்களை நெட் ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது.


தமிழ்ப்படங்களை வாங்கிக்குவித்த நெட் ஃபிளிக்ஸ்!!


மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெய் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம், விஷ்ணுவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன், பா.ரஞ்சித் இயக்கத்தில் பார்வதி, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய படங்களின் ஓடிடி உரிமத்தை நெட் ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது.


தமிழ்ப்படங்களை வாங்கிக்குவித்த நெட் ஃபிளிக்ஸ்!!

மேலும் ரிவால்வர் ரீட்டா, வாத்தி, தலைகோதல், இறுகப்பற்று, இவை இல்லாமல் பெயரிடப்படாத சில படங்களையும் நெட் ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது.



newstm.in

Trending News

Latest News

You May Like