1. Home
  2. சினிமா

சர்ச்சை பேச்சால் சிக்கிய வாத்தி பட இயக்குனர்..!!


நடிகர் தனுஷின் நேரடி தெலுங்கு படமாக உருவாகியிருக்கும் ’சார்’ படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.தமிழில் ’வாத்தி’ என்ற பெயரிலும் வெளியாகியிருக்கிறது. சமுத்திரக்கனி, சம்யுக்தா என பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை தெலுங்கு பட இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கியிருக்கிறார். படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் நேர்காணல்களில் பேசினார்கள்.

அந்த வகையில், படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரியும் தெலுங்கு தொலைக்காட்சிக்கான நேர்காணலில் பேசியிருந்தார். அதில் வாத்தி படம் பேசும் கரு குறித்தும், கல்வியை வியாபார மயமாக்கியது குறித்தும் பேசியிருந்தார். இருப்பினும் இட ஒதுக்கீடு பற்றி வெங்கி அட்லுரி பேசியதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படித்தியிருக்கிறது. அதன்படி, ‘ஒருவேளை நீங்கள் ஒன்றிய கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள்?’ என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.


சர்ச்சை பேச்சால் சிக்கிய வாத்தி பட இயக்குனர்..!!

அதற்கு, ‘இது சர்ச்சையான பதிலாக இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கக் கூடிய இடஒதுக்கீட்டு முறையை ஒழித்துவிட்டு எல்லாருக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவேன். அப்போதுதான் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். ‘சாதி ரீதியான இடஒதுக்கீடு கூடாது.’ என பேசி பெரும் புயலையே கிளப்பியிருக்கிறார் வெங்கி அட்லுரி.

இவரது இந்த பேச்சுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுபோக, ‘இடஒதுக்கீடு தொடர்பான அதிகாரம் கல்வி அமைச்சரிடத்திலேயே இல்லை. அதற்கென ”மினிஸ்ட்ரி ஆஃப் சோசியல் ஜஸ்டிஸ் அண்ட் எம்பவர்மெண்ட்” என்ற தனித் துறையே இருக்கிறது.’ என சுட்டிக்காட்டியும் வெங்கி அட்லுரியை சாடி வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like