1. Home
  2. சினிமா

கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் குழு பாடகி!!

கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் குழு பாடகி!!

பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் பாடியுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் குழுவைச் சேர்ந்த பிரபல பாடகி ரக்ஷிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கினார்.

பாடகி ரக்ஷிதா சுரேஷ் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, தெலுங்கில் நானியின் எவடே சுப்பிரமணியம் படத்தில் பயன்படுத்தப்பட்ட, தென்றல் வந்து தீண்டும்போது தெலுங்கு வெர்ஷனை பாடி பிரபலமானார்.

பின்னர், வெந்து தணிந்தது காடு படத்தில் காலத்துக்கும் நீ வேணும், கோப்ரா படத்தில் ஏல இளஞ்சிங்கமே, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சொல் உள்ளிட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.


கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் குழு பாடகி!!


மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் வெளிநாடுகளில் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் அனைத்திலும் ரக்ஷிதா சுரேஷ் கலந்து கொள்வார். அந்த அளவுக்கு பிரபலமான பாடகியாக திகழ்கிறார். இந்நிலையில், தாம் மலேசியாவில் கார் விபத்தில் சிக்கியதை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், மலேசியா ஏர்போர்ட் நோக்கி பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி சாலையின் மறுபக்கம் விழுந்தது. என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் கண்முன் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.


கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் குழு பாடகி!!


ஏர் பேக் இல்லை என்றால் நிலைமை மோசமாகியிருக்கும். அதனை நினைத்து இப்பொழுதும் உடல் நடுங்குகிறது. நானும் டிரைவரும் என்னுடன் பயணித்தவரும் சிறிதான காயங்களுடன் தப்பித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள் என்று பதில் கூறி வருகின்றனர்.



newstm.in

Trending News

Latest News

You May Like