1. Home
  2. சினிமா

காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!!


கேரளாவை சேர்ந்த நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி 2019ஆம் ஆண்டு விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஆகிய படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார். இதனிடையே நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிகர் ஒருவரை காதலிப்பதாக பரவலாக பேசப்பட்டது.


காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!!

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், கைதி புகழ் அர்ஜுன் தாஸ் உடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார். கேப்ஷனாக ஹார்ட்டின் எமோஜியையும் சேர்த்து பகிர்ந்தார்.

அதனை கண்ட இணையவாசிகள் இருவரும் காதலிப்பதாக பேசத் தொடங்கினர். பல்வேறு ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்களது புகைப்படம் வைரலாகி ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கத் தொடங்கினர்.


காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!!

இந்த செய்தி வைரலானதையடுத்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய கடைசி பதிவு இந்த அளவுக்கு பேசுபொருள் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்த போட்டோவை பதிவிட்டேன். எங்களுக்குள் எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். அர்ஜுன் தாஸ் ரசிகர்களே, அவர் உங்களுக்கு தான் என்று பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like