1. Home
  2. சினிமா

கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு – காதலன் விடுதலை!!

கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு – காதலன் விடுதலை!!

பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில் இருந்து நடிகரும், அவரது காதலருமான சூரஜ் பஞ்சோலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு நடிகை ஜியா கான் மும்பை ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பு எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.


கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு – காதலன் விடுதலை!!


இந்நிலையில், தனது மகள் கொல்லப்பட்டுள்ளதாக, ஜியா கானின் தாயார் குற்றம் சாட்டினார். இதனையடுத்து ஜியா கானின் காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நடிகையின் தாயார் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ நடத்திய விசாரணையில் ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு – காதலன் விடுதலை!!

இந்த வழக்கில் சூரத் பாஞ்சாலி குற்றமற்றவர் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் இந்த வழக்கினை முடித்து சூரஜ் பாஞ்சோலியை விடுவித்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like