1. Home
  2. சினிமா

எப்படி தடை விதிக்கலாம் ? தமிழக மற்றும் மேற்குவங்க அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

எப்படி தடை விதிக்கலாம் ? தமிழக மற்றும் மேற்குவங்க அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்திரித்துள்ளதாக இப்படத்தின் மீது எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சமூகப் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம்' திரையரங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமை என்று நீதிபதிகள் கூறிய நிலையில், தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு மேற்கு வங்காள அரசுகக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மே 15 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like