இசைஞானி இளையராஜாவை கடுமையாக விமர்சித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!!
டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், பசங்க, நாணயம், யாதுமாகி, ஈசன், ஓ அந்த நாட்கள் , சண்ட மருதம் என்று தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த பேட்டியில், ’’இளையராஜா மாதிரி ஒரு மட்டமான மனிதரை பார்க்க முடியாது . அவர் பெரிய இசையமைப்பாளர் ஞானி என்று பட்டம் எல்லாம் கொடுத்திருக்காங்க. அதுக்கெல்லாம் அவர் முழு முழு தகுதியானவர்தான். அவர் இசையை நான் விமர்சிக்கவே இல்லை. அப்படி நான் விமர்சித்தால் என் குருவை நான் விமர்சிப்பதாக இருக்கும். காரணம் கற்றுக் கொண்டது நான் அவரிடம் தான்.
அவர் ஒரு ஞானி என்பதற்காக எல்லாமே பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இளையராஜாவின் பாடல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவேன். ஆனால் மனிதராக அவர் ரொம்ப மட்டமானவர். கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாதவர். ஒரு முட்டாள் போல் பேசுகிறார் .
கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் பலரும் அவரை சாமி என்றுதான் கூப்பிடறாங்க. ரஜினி சார் அவரை எல்லாம் சாமி என்றுதான் கூப்பிடுகிறார். அந்த அளவுக்கு ஆன்மீக விஷயங்களை பேசுவார் இளையராஜா . ஆன்மீகத்திற்குள் போக போக முதிர்ச்சியும், சகிப்புத்தன்மையும், பெருந்தன்மையும், புரிந்து கொள்ளுதலும் வரும். அது தானே ஆன்மிகம் . ஆனால் ஆன்மீகத்துக்குள் போறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் ரொம்ப அசிங்கமா பேச ஆரம்பிச்சாரு .
சில மாதங்களுக்கு முன்பாக கூகுள் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கே இசை சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு, முட்டாள்தனமாக கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இயேசு பிறந்தார் உயிர் துறந்தார் உயிரித்தெழுந்தார் என்று சொல்றாங்க . எனக்கெல்லாம் அது தெரியல . ஆனா, ரமண மகரிஷி ஒருத்தர் தான் செத்து உயர்ந்து உயர்த்தெழுந்தவர் என்று சொல்றார் .
கோடிக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறார்கள். அத்தனை பேர் மனதையும் காயப்படுத்தக் கூடாது என நினைப்பார்கள் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் இளையராஜா என்றால் இப்படி பேசுகிறார் . உண்மையில் ரமண மகரிஷி உயிர்த்தெழுந்ததே பொய் . அவர் வலிப்பு வந்து ஐந்தாறு மணி நேரம் கிடந்து இருக்கிறார். இறக்கவில்லை. அதைத்தான் அவர் செத்து உயிர்த்தெழுந்து விட்டதாக திரித்து விட்டதாக கூறுகிறார்கள். இதைப் பற்றி இளையராஜா சொல்லாமல் மற்றவர்களின் நம்பிக்கையை காயப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். ஆன்மீகத்திற்குள் போனவருக்கு இந்த புரிதல் எதுவுமே இல்லை என்றால் அவர் ஏமாற்றுக்காரர் தானே?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.