1. Home
  2. சினிமா

#JUST IN : பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி..!!

#JUST IN : பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி..!!

சர்ச்சையில் சிக்கிய தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் சுதீப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.தி கேரளா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்தன.

பின்பு படத்தின் ட்ரெய்லரில் இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி இத்திரைப்படத்தின் கதையானது, கேரளாவில் காணாமல் போன 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இது போன்ற சர்ச்சைக்குள்ளான காட்சிகளினால் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஒய்வு இல்லாமல் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டதால் இயக்குனருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது

Trending News

Latest News

You May Like