8 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர ஜோடிக்கு ஆண் குழந்தை!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் சரவணன் ரோலில் மிர்ச்சி செந்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா சந்திரன் மீனாட்சியாக நடித்தார்.
கேரளாவை சேர்ந்த இவர், இதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.
ரீல் ஜோடியான இவர்கள் நிஜத்தில் இணைந்தாலும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா நடிப்பதை நிறுத்தினார். மிர்ச்சி செந்தில் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் கடைசியாக நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதற்கிடையே தனது மனைவி ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டகிராமில் செந்தில் அறிவித்தார். இந்நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் என்று செந்தில் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
newstm.in