4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த ‘பசங்க’ பட நடிகர்!!
பசங்க படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர் கிஷோர் தன்னைவிட 4 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான பசங்க திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர், தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார்.
இந்நிலையில், கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிஷோரும், ப்ரீத்தி குமாரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணப் புகைப்படத்தை ப்ரீத்தி குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர்களும், இவர்களது நண்பர்களும் இணையத்தில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ப்ரீத்தி மற்றும் கிஷோரின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. கிஷோர், ப்ரீத்தியை விட நான்கு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in