மைனஸ் 15 டிகிரி குளிரில் பிகினியில் தண்ணீரில் இறங்கிய நடிகை!! VIDEO
மைனஸ் 15 டிகிரி குளிரில் பிகினி உடையில் பனிநீரில் மூழ்கி எழுந்து நடிகை ரகுல் பிரீத்சிங் சவால் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. உள்ளிட்ட படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத்சிங். இவர் தெலுங்கு, ஹிந்தி என பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களில் நடித்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் இவர், தனியாக ஜிம்மே நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், தற்போது சவாலுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் யாராவது இதுபோல் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படி அவர் என்ன செய்தார் என்றால், பிகினி மட்டுமே அணிந்து, -15 டிகிரி வெப்பநிலை உள்ள இடத்தில், நீரில் இறங்கி எழுந்து வந்துள்ளார். உடல் விரைத்துவிடும் கடுங்குளிரில் இவ்வாறு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
newstm.in