டூ-வீலர் வாங்கப் போறீங்களா..?: இதோ புதிய விலைப்பட்டியல்..!
நாட்டின் பணவீக்கம், உதிரிப் பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் கடந்த 22-ம் தேதி முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை 1000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
இந்தியாவில், ஹீரோ மோட்டோகார்ப்-ன் தற்போதைய தயாரிப்பு போர்ட் ஃபோலியோ ரூ.55,450 முதல் ரூ.1,36,378 வரையிலான பதினான்கு மோட்டார் சைக்கிள்களையும் (எக்ஸ்-ஷோரூம்) ரூ.66,250 முதல் ரூ.77,078 வரையிலான நான்கு ஸ்கூட்டர்களையும் உள்ளடக்கியது (எக்ஸ்-ஷோரூம்). இதில் விலையைத் தவிர வாகனங்களில் எவ்விதமான மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் அறிவித்துள்ள விலை உயர்வு எவ்வளவு என்பதை இங்கே அறிந்து கொள்வோம்.
பைக்குகளின் பட்டியல்:
Splendor+: ரூ.70,658
Splendor+ XTEC: ரூ 74,928
ஹெச்எஃப் டீலக்ஸ்: ரூ 59,890
ஹெச்எஃப் 100: ரூ 55,450
Glamour XTEC: ரூ 84,220
Passion XTEC: ரூ 75,840
சூப்பர் ஸ்பிளெண்டர்: ரூ.77,500
கிளாமர் : ரூ 77,900
கிளாமர் கேன்வாஸ்: ரூ. 80,020
பேஷன் ப்ரோ: ரூ 74,290
எக்ஸ்ட்ரீம் 160ஆர்: ரூ 1,17,748
எக்ஸ்ட்ரீம் 200S: ரூ 1,34,242
XPULSE 200 4V: ரூ 1,36,378
XPULSE 200T: ரூ 1,24,278
ஸ்கூட்டர்களின் விலைப் பட்டியல்:
Pleasure +: Rs 66,250
டெஸ்டினி 125 XTEC: ரூ. 70,590
புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125: ரூ. 77,078
மேஸ்ட்ரோ எட்ஜ் 110: ரூ. 66,820