1. Home
  2. ஜோதிடம்

ஜூன் மாத ராசி பலன்கள் 2020

ஜூன் மாத ராசி பலன்கள் 2020

ஜூன் மாத ராசி பலன்கள் 2020

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் (), புதன்ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி () -  தொழில் ஸ்தானத்தில் குரு () - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சிக்கலான காரியங்களையும் தெளிவான முடிவெடுத்து பிரச்சினைகளை தீர்க்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் மனக்கவலை  உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம்வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் சிந்தனை செலுத்துவீர்கள்சிறு வியாபாரிகள் கூட அதிக லாபத்தை காண முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தாராளமாக கிட்டும். யாரையும் நம்பி எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். சிலர் எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

அரசியல் பிரமுகர்களுக்கு எதிர் பார்த்த விசயங்கள் கை கூடி வரும். அரசு விவகாரங்களில் தலையிடும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மையைத்தரும்.

பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள்  குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

அஸ்வினி:

இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும்எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பரணி:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பரிகாரம்: தினமும் கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்யுங்கள். எதிலும் சிரமம் ஏற்படாது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

கிரகநிலை:

ராசியில் சூர்யன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் (), புதன் -   பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி ()  - பாக்கிய ஸ்தானத்தில் குரு ()  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்பும்  ரிஷப ராசி அன்பர்களேஇந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த  மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள்  வந்து சேரும். வியாபாரிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் கால கட்டம். எதிர்மறையான சிந்தனைகளை விட்டு விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. நேரத்திற்கு தகுந்தாற்போல் பேச்சை மாற்றி வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பை தவற விட்டு பின்பு நம்பிக்கையான ஒருவர் மூலம் அதைப் பெற முடியும். எந்த விசயத்திலும்  ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது எதிர்காலத்திற்கு உதவும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணிகள் நடப்பதற்கு சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். தந்தை வழி அரசியல் செய்பவர்கள் எதிலும் கவனமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

ரோகிணி:

இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

பரிகாரம்: சிவன் கோவிலுள்ள நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, சுக்ரன் (), புதன் -   சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது, சனி () - அஷ்டம ஸ்தானத்தில்  குரு () -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்பும் மிதுன ராசி அன்பர்களே,   இந்த மாதம் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். ஆனால் மனகுழப்பம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குவது பற்றி நண்பர்களிடம் ஆலோசனை நடத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற முடியும். புதிய வாய்ப்புகளால் மனம் மகிழ்ச்சி அடையும்.

அரசியல் துறையினருக்கு ஏற்படும் அனுபவங்கள் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அறிவுரைகளாக இருக்கும். எந்த ஒரு செயலில் ஈடுபடும்  போதும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு  உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.

திருவாதிரை:

இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம்மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

பரிகாரம்: நரசிம்மர் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி () -  களத்திர ஸ்தானத்தில்  குரு ()  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் (), புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் எண்ணிய எண்ணம் ஈடேறும். யாராவது உங்கள் வேலைகளைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள். வீரியத்தைக் குறைத்துக் கொண்டு காரியத்தை பெரிதாக எண்ணுங்கள்அனைவரையும் அரவணைத்துச் சென்று காரியங்களை நடத்துவீர்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலில் இருந்த பண பிரச்சனை தீரும். பங்குதாரர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

கலைத்துறையினர் முன் பின் பழக்கமில்லாதவர்களிடம் எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். புதிய அனுபவங்கள் கிடைக்கலாம்.

அரசியல் துறையினர் முக்கியமான நபர்களின் அறிமுகங்களை சந்திப்பதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சற்று நிதானமாக செயல் படுவது நல்லது.

பெண்களுக்கு  உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லதுஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

பூசம்:

இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

ஆயில்யம்:

இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.  

பரிகாரம்: மாங்காடு காமாட்சி அம்மனை மனதார துதித்து வழிபடுங்கள். தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13,

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  கேது, சனி () -  ரண, ருண ஸ்தானத்தில் குரு () -  களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன்லாப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் (), புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சாதகமாகும் என்று நம்பும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம்  நினைத்த காரியங்கள் நடக்கும். நடக்கும் முறை வேறுபட்டாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.

குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தூரத்திலிருந்து வரும் உறவினர்கள் குடும்பப் பொறுப்பை உங்களுக்கு உணர்த்துவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள்  குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள்  நல்லபடியாக முடியும். பங்குதாரர்களிடம் வாக்கு வாதத்தைதவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். தேவைக்கேற்பற்ற வசதிகள் கிடைக்கும்.

கலைத்துறையினர் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சிலர் சொன்ன சொல்லை காப்பாற்ற சிரமப் பட வேண்டியிருக்கும். புதிதாக பழகுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையைத் தரும்.

அரசியல் துறையினர் அதிக கவனமுடன் செயலாற்ற வேண்டிய கால கட்டம். உங்களுக்கு பக்கபலமாக சிலர் இருப்பினும் அனைவரையும் நம்பி எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு  எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

மகம்:

இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லதுபணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும்.

பூரம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் சிவன் ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - சுக  ஸ்தானத்தில்  கேது, சனி () - பஞ்சம ஸ்தானத்தில் குரு () -  ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் (), புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம்  திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடும் திறமை உங்களுக்கு ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். மேலிடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

அஸ்தம்:

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: ஏழை பிராமணருக்கு அன்னமிட்டு உதவுங்கள். தொல்லைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, சனி () - சுக  ஸ்தானத்தில்  குரு () - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் (), புதன் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு கவலைப்படும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணவரவுகள் இருப்பின் அது வந்து சேரும்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலகட்டம். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து வாய்ப்புகள் வரலாம். உடனிருப்பவர்களால் நல்ல ஆதாயம் ஏற்படும்.

அரசியல் வாதிகள் தக்க சமயத்தில் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். பிரச்சினைகளில் இருந்து சற்று தள்ளியே நில்லுங்கள். இப்போதைக்கு எதிலும் தலையிட வேண்டாம்.

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். உடல் நலத்தில் சிறிது அக்கறை செலுத்தவும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

சுவாதி:

இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13,

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி ()  -   தைரிய ஸ்தானத்தில்  குரு () - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்  - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, சுக்ரன் (), புதன்  - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது என்ற எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக  செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு காண்பீர்கள்எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் கையாளும் பொருள்களை  பாதுகாப்பாக வைப்பது நல்லது. எதையும் தக்க சமயம் பார்த்து பேசுவது உகந்தது.

கலைத்துறையினர் பிறர் விசயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மூத்த கலைஞர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்வது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தொண்டர்களுடான கருத்து வேறுபாடு மறையும். சின்ன சின்ன விசயங்களுக்காக மாற்று கருத்துகள் தோன்றி மறையும். எதிர்கள் கட்டுக்குள் இருப்பார்கள்.

பெண்களுக்கு  மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு ஏற்பட்டாலும் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.

கேட்டை:

இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்: சுப்பிரமணிய சுவாமிக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

கிரகநிலை:

ராசியில்  கேது, சனி () - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு () - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்களத்திர ஸ்தானத்தில்  ராஹு, சுக்ரன் (), புதன்  - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ ஆசைப்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம்  பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின்  நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரும் தகவல்களால் மனதிற்கு நிம்மதி இருக்காது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். மேலிடத்திலிருந்து வரும் தகவல்கள் உங்கள் எதிர்காலத்திற்கு தேவையானதாக இருக்கும்.

கலைத்துறையினர் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாராட்டு பெறுவீர்கள். வெளிநாடு பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும். தீவிர முயற்சிகளால் வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினர் வெற்றியை படிபடியாக எட்டுவீர்கள். அனைவரின் பாராட்டும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிரிகளால் மறைமுக தொல்லைகள் உண்டாகும். வீண் அலைச்சல்களால் மனம் வருத்தப்படும்.

பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மூலம்:

இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

பூராடம்:

இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருங்கள். தீவினை நெருங்காது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25,

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

கிரகநிலை:

ராசியில் குரு () -  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் (), புதன்  -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயனபோக ஸ்தானத்தில் கேது, சனி (என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கோபப் படுபவர்களிடம் இருந்து சற்று தள்ளியே நிற்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  காரியம் துரிதமாக நடைபெறும். சில எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியவில்லை என்ற எண்ணம் மனதை வருத்திக் கொண்டிருக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால் மிகவும் டென்ஷனாகி விடுவீர்கள். மனவலிமையை அதிகமாக்க தியானம் செய்யுங்கள். தீராத தலைவல்லியாக இருந்த காரியங்கள் இப்பொழுது சாதகமாகும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத் தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்சக ஊழியர்களின் பொறாமை உங்கள் மேல் விழும்.

கலைத்துறையினர் அனுபவம் வாய்ந்த கலைஞர்களை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை வந்து சேர தாமதமாகும். வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும் பொழுது உங்களுடைய பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அரசியல் துறையினர்கள் மெத்தனமான போக்கை கைவிட்டு உற்சாகத்துடன் செயல்பட அறிவுறுத்தப் படுகிறார்கள். நிரந்தரமான செயல்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

திருவோணம்:

இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் (), புதன்  -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது, சனி () - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு (என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காணும் கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை .

குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லதுஉங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது கரிசனத்துடன் நடந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினர் நடந்து முடிந்த ஒரு செயலுக்காக வருத்தமாக இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். இசைக் கலைஞர்கள் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த செயல்கள் நல்ல முறையில் நடந்து முடிவதற்கான சூழ்நிலைகள் அமையப் பெறுவீர்கள். தங்கு தடையின்றி எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

சதயம்:

இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.   

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

பரிகாரம்: நவகிரகங்களை தினமும் வலம் வந்து வணங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சூர்யன்  -  சுக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் (), புதன்களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில் கேது, சனி () - லாப ஸ்தானத்தில்  குரு () - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-06-2020  அன்று பகல் 10.50 மணிக்கு சுக்ர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-06-2020 அன்று காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உங்களுடன் பழகுபவர்களும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று  விரும்பும் மீன ராசி அன்பர்களே,   இந்த மாதம் சில சங்கடங்கள் நேரலாம்எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. கெட்ட கனவுகள் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். நீண்ட நாளைய முயற்சிகள் வெற்றி பெற கடின உழைப்பு தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத் துறையினருக்கு அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். எதிர்பார்த்த காரியங்கள் சற்று தள்ளிப் போவதால் சிறிய வருத்தம் ஏற்படலாம். இந்த மாத இறுதியில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு உண்டான வேளைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். மிகவும் சோர்வு ஏற்பட்டு வேலையை தள்ளிப் போடுவீர்கள். நெருக்கடியான சமயங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

உத்திரட்டாதி:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

ரேவதி:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

பரிகாரம்: தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படியுங்கள். வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25,

Trending News

Latest News

You May Like