வார ராசி பலன்கள் - ஜூன் 24 முதல் 30 வரை...

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த ஜூன் 24 முதல் 30 வரையிலான வார ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.

வார ராசி பலன்கள் - ஜூன் 24 முதல் 30 வரை...
X

weekly-astrology-june-24-to-30

வார ராசி பலன்கள் - ஜூன் 24 முதல் 30 வரை...

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த வார ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.

இந்த வார கிரக மாற்றங்கள்:

24-06-2018 அன்று சந்திர பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். 27-06-2018 அன்று சந்திர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். 29-06-2018 அன்று சந்திர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.

ராசிக்கு நான்காம் இடத்தில் புதன், சுக்ரன் மற்றும் ராஹு கூட்டமைவைக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறையில் முடியும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங்கும். புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடக்கும்.  தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள்.  உத்யோகஸ்தர்கள் பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். கேட்டபடி மாறுதல் கிடைக்கும். சிலர் விருப்ப ஓய்வில் செல்வார்கள். திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார்கள்.  குடும்பத்தில் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தவர்கள் அடையாளம் கண்டு விலகுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகள் சாதகமான பலன் தரும். எதிர்பார்த்த பதவி வந்துசேரும்.  பெண்களில் வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, பெற்றோர்களின் பாராட்டைப் பெறுவார்கள். பரிகாரம்: தினசரி கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கவும். தெளிவான சிந்தனை உதயமாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிசுகாதிபதியை குடும்ப ஸ்தானத்தில் அமையப் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மற்றவர்கள் ஒதுக்கிப் பார்த்தாலும் இறைவன் ஒதுக்கி வைப்பதில்லை. இதுவரை உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவுக்கு வரும்.  தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடும்முன் சக நண்பர் களைக் கலந்து செய்யும் முடிவு லாபத்தைத் தரும். எதிர்பார்த்தபடி வெளிநாடு செல்வீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். போட்டி வியாபாரிகள் ஒதுங்கிப்போவார்கள்.  உத்யோகஸ்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.  குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை உண்டு. பெண்களால் குடும்பத்தில் நன்மையுண்டு. நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும். மகப்பேறு இல்லாமல் ஏங்குவோர், முன்னோர்கள் அருளால் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். சேமிப்பு உயரும்.  பெண்களுக்கு கணவரால் இருந்து வந்த தொந்தரவுகள் மாறும். அரசு ஊழியர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும்.  மாணவர்களின் தொழிற்கல்வி உயரும். கல்விக்கடனும் தடையின்றிக் கிடைக்கும். சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். சங்கடங்கள் குறையும் மாதம். பரிகாரம்: தினமும் அருகிலிருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்குச் சென்று வரவும். பொருளாதாரம் மேன்மை அடையும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்ராஜகிரகம் ராசியில் அமையப்பெற்ற மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன் செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். பெற்றோர் பிள்ளைகளுக்காகத் தேடும் வரன்கள் நல்லபடியாக அமையும்.  தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும்.  உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணிச்சுமை கூடியபோதும் அதிகாரிகளின் பாராட்டு தெம்பைக் கொடுக்கும்.  கணவன்- மனைவி ஒற்றுமையில் குறைவு வராது. உறவினர்கள் வருகையினால் குடும்பச் செலவுகள் கூடும். கடிதத் தொடர்பில் நல்ல தகவல்கள் வந்துசேரும். சொத்துப் பிரச்னையும் தீரும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள்.  பெண்கள் புதிய பதவிகளை அடைவார்கள். வருமானம் கூடும்.  மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பெற்றோரின் பாராட்டைப் பெறுவார்கள். பரிகாரம்: முடிந்த போதெல்லாம் பெருமாளை வணங்கி வரவும். மன உளைச்சல் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிவிரையாதிபதி மற்றும் சுகாதிபதியின் கூட்டமைப்பை ராசியிலேயே பெற்ற கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி பெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.  தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள்.  உத்யோகஸ்தர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். உற்சாகம் பிறக்கும்.  குடும்பத்தில் உங்களைவிட்டு விலகியிருந்த பிள்ளைகள் வலிய வந்துசேர்வார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும்.  பெண்களுக்கு குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள்.  மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  பரிகாரம்: அருகிலிருக்கூடிய அம்மன் ஆலயத்திற்குச் சென்று பஞ்ச முக தீபம் ஏற்றி வழிபடவும். எண்ணத்தில் இருக்கும் எதிர்மறை அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிராசியாதிபதியை லாபஸ்தானத்தில் அமையப்பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கவேண்டும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் சுமுகமாகும்.  தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களால் சில பிரச்னைகளை சந்தித்து சுமுக தீர்வைக் காண்பீர்கள். லாபத்திற்குக் குறைவில்லை.  உத்யோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும்.  குடும்பத்தில் வேலை தேடும் இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். கடிதத் தொடர்பில் அனுகூலச் செய்திகளைப் பெறுவீர்கள்.  பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள்.  மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள். பரிகாரம்: தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும். உத்தியோகத்தில் இருக்கும் சிரமங்கள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்ஆயுள் காரகன் பார்வை பெறும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் நினைத்தபடி அனைத்து நிலைகளிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பொருளாதாரம் எப்போதும் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும்.  தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஊழியர்களால் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். . மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகலாம்.  குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்னைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத் தரும். ஒருவருக்கொருவர் ஏற்பட்ட போட்டிகள் மறையும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.  மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குரிய மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  பரிகாரம்: தினசரி ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்று வரவும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிபூர்வபுண்ணியம், களத்திரம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் குரு பார்வை பெறும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் இதுவரை சந்தித்துவந்த தடை, தாமதங்கள் விலகிச் செல்லும். பணநிலையில் திருப்தியான வரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும்.  உத்யோகஸ்தர்கள் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள்.  குடும்பத்தில் திருமணப் பேச்சுகள் கைகூடும். உங்களை நேசித்த ஒருவரை திடீரென்று பிரிய வேண்டிவரலாம். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.  பெண்கள் வேலை செய்யும் இடத்தில் பாராட்டப் படுவார்கள். மாணவர்கள் படிப்பிற்காக கேட்ட இடஒதுக்கீடுகளைப் பெறுவார்கள். கடிதத் தொடர்புகள் அனுகூலமாக அமையும்.  பரிகாரம்: தினசரி அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் இருக்கும் கருடாழ்வாரை வணங்கவும். நீண்ட நாட்களாக இருக்கும் தடைகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளிராஜகிரகத்தை அஷ்டம ஸ்தானத்தில் அமையப்பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும்.  தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல விற்பனையை அடைவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் ஈடேறும்.  உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். நினைத்தபடி மாறுதலை அடைவார்கள்.  குடும்பத்தில் இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். பெற்றோர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும்.  மாணவர்கள் விருப்பப்படி பள்ளிகளில் இடம் கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  பெண்களுக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். ஒருசிலர் அரசாங்கப் பரிசுகளைப் பெறுவார்கள்.  பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்ய மனம் தெளிவடையும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளிஜென்ம சனியுடன் சூர்ய பகவானின் பார்வை பெறும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நடக்கும். தகுந்த வருமானம் வருவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒருசிலர் பெற்றோர்களுக்காக கூடுதல் மருத்துவச் செலவு செய்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.  தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலைகள் துவங்குவார்கள். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளால் சிரமத்தை அடைவார்கள்.  உத்யோகஸ்தர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கூடும்.  குடும்பத்தில் பிரிந்துசென்றவர்கள் வந்து சேர்வார்கள். புதிய கடன்கள் வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்ப சீர்திருத்தம் ஏற்படும்.  பெண்களுக்கு நீங்கள் எதிர்பாராத உறவினர்கள் வந்துபோவார்கள். சில தம்பதியர் கருத்து வேற்றுமையால் பிரியநேரலாம்.  மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.  பரிகாரம்: பாடல் பெற்ற சிவன் கோவிலுக்குச் சென்று வர ஜென்ம சனி உக்ரம் குறையும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனிபுதன் - சுக்ரன் பார்வை பெறும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா நிலைகளிலும் காரியத் தடைகள் ஏற்படும். பின்பு அனைத்து செயல்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். பணவரவுக்குக் குறைவில்லை. பிள்ளைகள் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.  தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு விற்பனை பெருகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும்.  உத்யோகஸ்தர்கள் கூடுதல் லாபம் அடைவார்கள். உடன் பணிபுரிவோரால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவியின் சேமிப்பு தக்க நேரத்தில் கைகொடுக்கும். ஒருசிலருக்கு புதிய வீடுகட்ட போட்ட திட்டம் கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் சேரும்.  பெண்கள் ஒருசிலர் உயர் பதவியில் அமர்வார்கள். கலப்புத் திருமணம் செய்யவுள்ள காதலர்கள் எண்ணம் நிறைவேறும்.  மாணவர்கள் புதிய சிந்தனையோடு கல்வியைத் தொடங்குவார்கள்.  பரிகாரம்: தாயாருடன் சேர்ந்த பெருமாள் கோவிலுக்குச் சென்று வர மனக்குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிராசியாதிபதி பார்வை பெறும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் குழப்பம் விளைவித்த உறவுகள் விலகிச்செல்வார்கள். திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். எப்போதும் சுற்றித் திரிந்த பிள்ளைகள் பெற்றோர் வழிகாட்டுதல்படி வேலைக்குச் செல்வார்கள்.  தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.  உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் காண்பார்கள். வழக்குகள் சாதகமாகச் செல்லும்.  குடும்பத்தில் இதுவரை உங்களை வாட்டிவதைத்த பிணி, பீடைகள் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். ஒருசிலருக்கு திருட்டுப்போன பொருட்கள் கிடைத்துவிடும். பிள்ளைகளால் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும்.  பெண்கள் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தலைமையால் மாற்றப்படுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும்.  மாணவர்களுக்கு எதிரிகள் விலகிச் செல்வார்கள். உயர்கல்வி எண்ணம் நிறைவேறும். பரிகாரம்: சித்தர்களை வணங்க மனக்கஷ்டம் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனிகுடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை பெறும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் அதிர்ஷ்ட பாக்கியங்களைப் பெறுவார்கள். இவர்கள் யோகத்தில் கணவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்.  தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல லாபங்களைப் பெறுவார்கள். வெளிநாடுகளில் கிளைகள் துவங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.  உத்யோகஸ்தர்கள் ஒருசிலர் வேலைப் பளு காரணமாக விருப்ப ஓய்வில் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும்.  குடும்பத்தில் பெண்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். காலம் கடந்துவந்த திருமணம் இனிதே நடைபெறும். கணவன் - மனைவி உறவு பலப்படும். பெண்களுக்கு சகோதரர்களிடையே இருந்த சொத்துப் பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும்.  மாணவர்கள் பயணத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உயர்கல்வி பற்றிய எண்ணங்கள் ஈடேறும்.  பரிகாரம்: சித்தர்களுடன் கூடிய முருகன் கோவிலுக்குச் சென்று வருவது நலம் தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

newstm.in

Tags:
Next Story
Share it