1. Home
  2. ஜோதிடம்

27-7-2018 இன்றைய ராசிபலன்கள்! - வீண் செலவு உண்டாம்... ஐந்து ராசிகாரர்கள் ஜாக்கிரதை!

27-7-2018 இன்றைய ராசிபலன்கள்! - வீண் செலவு உண்டாம்... ஐந்து ராசிகாரர்கள் ஜாக்கிரதை!

daily-free-astrology-27-7-2018

27-7-2018 இன்றைய ராசிபலன்கள்! - வீண் செலவு உண்டாம்... ஐந்து ராசிகாரர்கள் ஜாக்கிரதை!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 11 I இங்கிலீஷ்: 27 July 2018 I வெள்ளிக்கிழமை

பௌர்ணமி இரவு 2.27 மணி வரை. பி ன் பிரதமை I உத்திராடம் இரவு 1.47 மணி வரை. பின் திருவோணம்

விஷ்கம்பம் நாமயோகம் I பத்ரை கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 4.59

அகசு: 31.15 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1 I க டக லக்ன இருப்பு: 7.35 I சூர்ய உதயம்: 6.04

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள். I சங்கரன் கோவில் தபசு. ஆடித்தபசு. பௌர்ணமி.

திதி:பௌர்ணமி I சந்திராஷ்டமம்: மிருகசீரீஷம், திருவாதிரை

சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் எவை தெரி யுமா?

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 2018 ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - பரிகாரங்கள்!ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எல்லா பிரச்னை களும் தீரும். மனதிருப்தி ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். எதிர்ப்புகள் விலகும். சூரியன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். கஷ்டங்கள் குறையும். உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க முற்படுவீர்கள். வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்னையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9 மினி தொ டர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 3 - எதிர்ப்பும் ஆதரவும்மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

newstm.in

Trending News

Latest News

You May Like