1. Home
  2. ஜோதிடம்

அனைத்து ராசிகளுக்கான இன்றைய பொது பலன்கள் (12-02-2020)

அனைத்து ராசிகளுக்கான இன்றைய பொது பலன்கள் (12-02-2020)

அனைத்து ராசிகளுக்கான இன்றைய பொது பலன்கள் (12-02-2020)

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  ரண,  ருண ஸ்தானத்தில்  சந்திரன் -   பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - லாப ஸ்தானத்தில்  புதன் (வ) -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம   ஸ்தானத்தில்  சந்திரன் -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்  -  தொழில் ஸ்தானத்தில் புதன் (வ) -  லாப ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கிரகநிலை: ராசியில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சந்திரன்  -   களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ) -  தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் -  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ)  -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திட்ட மிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன் -  களத்திர ஸ்தானத்தில் புதன் (வ) -  அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கிரகநிலை: ராசியில்  சந்திரன் - சுக  ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் -  ரண, ருண ஸ்தானத்தில்  புதன் (வ)  -  களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -  தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்-  பஞ்சம ஸ்தானத்தில்  புதன் (வ)  -  ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் -  சுக  ஸ்தானத்தில்  புதன் (வ) - பஞ்சம ஸ்தானத்தில்   சுக்ரன் - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு - லாப ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்வீர்கள். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9         கிரகநிலை: ராசியில் செவ்வாய்,  குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் புதன் (வ) -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்  ராஹு - தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கிரகநிலை: ராசியில்  சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ) -  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்  -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5கிரகநிலை: ராசியில் புதன் (வ) -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - அஷ்டம  ஸ்தானத்தில்   சந்திரன் -   லாப ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: ராசியில் சுக்ரன் -  சுக ஸ்தானத்தில் ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்  -  தொழில்  ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில்  சூர்யன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் புதன் (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

newstm.in

Trending News

Latest News

You May Like