1. Home
  2. ஜோதிடம்

அனைத்து ராசிகளுக்கான இன்றைய பொது பலன்கள் (04-03-2020)

அனைத்து ராசிகளுக்கான இன்றைய பொது பலன்கள் (04-03-2020)

அனைத்து ராசிகளுக்கான இன்றைய பொது பலன்கள் (04-03-2020)

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிரகநிலை: ராசியில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -  தொழில் ஸ்தானத்தில் புதன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி, கேது  -  பாக்கிய ஸ்தானத்தில் புதன்  - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கிரகநிலை: ராசியில் சந்திரன்,  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் -  பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் -   லாப  ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில்  புதன் - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன்  -  தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில்  புதன்  - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கிரகநிலை: சுக  ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்  -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -   தொழில்  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - சுக  ஸ்தானத்தில் புதன்  -  பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன்  -  களத்திர  ஸ்தானத்தில்  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது  -  தைரிய ஸ்தானத்தில்  புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கிரகநிலை: ராசியில் செவ்வாய்,  குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன்  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் -  பஞ்சம  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கிரகநிலை: ராசியில்  புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் -  ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -   அயன, சயன,  போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கிரகநிலை: ராசியில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ  -   லாப ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் -  சுக ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ - தொழில்  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -    லாப ஸ்தானத்தில்  புதன்  -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

newstm.in

Trending News

Latest News

You May Like