1. Home
  2. ஜோதிடம்

20-02-2025 - இன்றைய ராசி பலன் - இன்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் முழுகவனத்தையும் செலுத்துவீர்கள்..!

1

மேஷம்:

இன்று தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும்பொருளாதார திட்டங்களில் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து செய்வது நல்லதுவரவேண்டிய பணத்தை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள்  கவனமாக பணிகளை கவனிப்பது நல்லதுஎந்திரங்களை இயக்கும் போதும் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்:

இன்று குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையில்  சில்லறை சண்டைகள் ஏற்படும்பிள்ளைகள் நீங்கள் கூறியபடி  நடக்கவில்லையே  என்ற கவலை உங்களுக்கு  ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9   

கடகம்:

இன்று பணவரத்து கூடும். எதிர்பார்த்த தகவல் தாமதமாக வரும். ஏதாவது கவலை மனதில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல்  மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பாடங்களில் சந்தேகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்:

இன்று மனகவலை நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் உண்டாகும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன்  ஈடுபட்டு  வெற்றி காண்பீர்கள்மனதில் உற்சாகம் உண்டாகும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கன்னி:

இன்று வீண் அலைச்சல் அதனால் கண்விழிக்கும் நிலை ஏற்படலாம்எதிர்பாராத செலவு வரலாம். நிர்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும். அடுத்தவர்கள் விவகாரத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:

இன்று தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும். உற்சாகமாக செயல்பட்டு புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பீர்கள்அதே நேரத்தில் போட்டியும் இருக்கும்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை  விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் மறைமுகமாக சில பிரச்சனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு:

இன்று கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. திடீர் செலவு உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்ட மிட்டு செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

.

மகரம்:

இன்று மாணவர்கள் உற்சாகமாக செயல்பட்டு பாடங்களை படிப்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:

இன்று வாழ்க்கையில்  முன்னேற வேண்டும் என்பதில் முழுகவனத்தையும் செலுத்துவீர்கள். காரியதாமதம், அதனால்  மனக் கவலை ஏற்படலாம். வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். அதனால்  அடுத்தவரின் பகைக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்:

இன்று பணவரத்து அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில்  தடையும்,தாமதமும் ஏற்படலாம். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Trending News

Latest News

You May Like