1. Home
  2. ஜோதிடம்

04-09-2024 - இன்றைய ராசி பலன் - இன்று கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது..!

1

மேஷம்:
இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த போட்டிகளோ, மறைமுக எதிர்ப்புகளோ இன்றி எதையும் சமாளிப்பார்கள். தனக்குள்ள வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


ரிஷபம்:
இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் தாராளமாகவே இருக்கும். கடன்கள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்திலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாவதோடு உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5


மிதுனம்:
இன்று வெளியுர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். நல்ல புத்திக் கூர்மையுடன் காரியத்தில் கண்ணாக விளங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் வேலையாட்களின் ஆதரவாலும் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கடகம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு மனை, கார், பங்களா போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் பதவி உயர்வும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6


சிம்மம்:
இன்று நினைத்ததெல்லாம் நிறைவேறும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை; நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்னியமும் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி:
இன்று கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் கிட்டும். உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு விடா முயற்சியுடன் செயல்படுவீர்கள். கடந்தகாலப் பிரச்சினைகள் விலகும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகளும் பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5


துலாம்:
இன்று எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். கடந்தகாலப் பிரச்சினைகளும் அலைச்சல்களும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6


விருச்சிகம்:
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையில் உயர்வுகள் உண்டாவதுடன் கௌரவமான நிலைகளும் ஏற்படும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெறுவர். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கடந்த காலங்களிலிருந்த அலைச்சல் டென்ஷன் குறையும். அசையா சொத்துகளிலிருந்த பிரச்சினைகள் விலகி பூமி மனை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு:
இன்று பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும்;. எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9    


மகரம்:
இன்று உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை உண்டாக்கும் என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்படவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் மனக் கவலைகள் உண்டாகும் என்றாலும், பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களால் மன சங்கடங்கள், வீண் பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்:
இன்று கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிள்ளைகளால் மனக் கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விவகாரங்களிலுள்ள வம்பு வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6


மீனம்:
இன்று திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். பங்காளிகளை அனுசரித்து நடப்பது நன்மையளிக்கும் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
 

Trending News

Latest News

You May Like