1. Home
  2. ஜோதிடம்

12-10-2018 தினப்பலன் - பொருளாதார நிலை உயரும் நாள் இன்று

12-10-2018 தினப்பலன் - பொருளாதார நிலை உயரும் நாள் இன்று

12-10-2018-newstm-daily-free-astrology

12-10-2018 தினப்பலன் - பொருளாதார நிலை உயரும் நாள் இன்று

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 26 I இங்கிலீஷ்: 12 October 2018 I வெள்ளிக்கிழமை

திரிதியை காலை 7.48 மணி வரை. பின் சதுர்த்தி I விசாகம் பகல் 1.42 மணி வரை. பின் அனுஷம்

ப்ரீதி நாமயோகம் I கரஜை கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 29.27 I அகசு: 29.32 I நேத்ரம்: 0 I ஜீவன்: ½ I கன்னி லக்ன இருப்பு: 6.28 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00

சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:இன்று கீழ்நோக்கு நாள் I சதுர்த்தி விரதம் I இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

நவராத்திரி ஸ்பெஷல் - நவராத்திரி மஹோற்சவம் தோன்றியது இப்படித்தான்!

மேஷம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் முதலீடு கிடைக்கும். எதையும் சந்திக்கும் தைரியம் உண்டாகும். தொழில்வகை எதிரிகள் உங்களது மாறாத தனித்தன்மையால் ஒதுங்கி விடுவார்கள். பிறருக்கு பணம் கொடுப்பதாக இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதும் நல்லவர்களை முன்னிலையாகக் கொண்டு அவர்கள் முன் கொடுப்பதும் பாதுகாப்பு தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று ஆபத்து தரும் வகையிலான இடங்களில் கவனத்துடன் நடந்து கொள்வது நன்மையைத் தரும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவும், புதிய சொத்துகள் வாங்கும் நிலையும் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.  அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில்  சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கிடைத்த வாய்ப்பை முழு மனதுடன் செயல்படுத்தி வளர்ச்சி காண முடியும். நண்பர்களின் தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்கு துணைபோகாமல் இருந்தால், பின்னால் வரும் பெரிய துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பொருளாதாரமும், புகழும் உங்கள் நற்செயல்களுக்கு  துணைபுரியும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 தினம் ஒரு மந்திரம் - புத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்த காயத்ரிகடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் -  சுக ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கவனச் சிதறல்கள் மாறி நல்ல நிலை பெறுவீர்கள். போக்குவரத்து இனங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நண்பர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். பகுதி நேர பணிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிட்டும். விட்டுக்கொடுத்து நடங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7சிம்மம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நலன்  தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிட்டும் வாய்ப்பு உண்டு. மனதில்  இருந்த சஞ்சலங்கல் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். சகதோழிகளுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு பொருளாதார நிலை வளம் நிறைந்ததாக இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீடு, பணியிடம் இவைகளில் ஏதேனும் ஒன்று மாறும் சூழ்நிலை உண்டு. சிலருக்கு பொன் ஆபரணங்களை புதுப்பிக்கும் வாய்ப்பு கிட்டும். மன தைரியத்துடன் அணுகும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். திருமணமான புதுப் பெண்களுக்கு புத்திரபேறு தாமதமின்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 நவராத்திரி ஸ்பெஷல் - ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரிதுலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிறு தொழில் செய்பவர்கள் குழுவினராக இணைந்து அரசின் உதவி பெற்று தொழிலில் மேன்மை அடைவர். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் பெருமை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பொருளாதார அசதி அதிகமாகும். அதிகமான வேலை வாய்ப்பு பெறுவார்கள். புதிய தொழ்ல்நுட்பத்தை புகுத்தி பொருளாதார வசதி பெறுவர். தொழிலில் கிடைக்கும் பணம் போதுமான அளவுக்கு இருக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7தனுசு: கிரகநிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சில சிக்கலான பேர்வழிகள் உங்களை ஆதரிப்பதாக கூறிக்கொண்டு அடைக்கலமாவது போல நடித்து உங்கள் பணத்திற்கும் பதவிக்கும் மறைமுகமாக தீங்கு விளைவிப்பார்கள். உங்களின் பாரம்பரிய குணங்களால் சிரமமின்றி தப்பிவிடலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2018மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மென்மையான சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு கடுமையான செயல்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் உயர்வும், புகழும் பெறுவதில் மந்தநிலையும், பயணத்தால் அனுகூலமும் உண்டு.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9கும்பம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் நிறுவனம் நடத்துவோர் புத்திரர்களின் உதவியால் தொழில் மேன்மை பெறுவர். நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது மிகுந்த நிதானம் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால் புகழ் தேடி வரும். புகழுக்கான ஆசையில் வீண் செலவுகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால பணத்தை மிக கவனமாக கையாள வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உங்களது இயற்கையான மனதைரியத்தால் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றில் அனுகூலமான நிலை உருவாகும். புத்திர வகையில் செலவினங்கள் உண்டாகும். தொழில் வகையிலும் உறவினர்கள், நண்பர்கள் வகையிலும் ஏற்பட்ட பகை நீங்கி அனுகூலம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6 காஞ்சி மகான் கொடுத்தனுப்பிய பிரசாதம்

newstm.in

Trending News

Latest News

You May Like