இந்த யோகம் 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருக்கிறது... யார் அந்த அதிர்ஷ்ட 3 ராசிக்காரர்கள் தெரியுமா ?
குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். ஆயுத மாதமான அக்டொபர் மாதத்தில் கடக ராசியில் செல்லவிருக்கிறார். சனி பகவான் மிதுன் ராசியில் பயணித்து வருகிறார். இதனால் அக்டோபர் மாதத்தில் நவபஞ்சம யோகம் உருவாகவுள்ளது.இந்த யோகமானது 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சி ஆனது 12ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளித்தரக்கூடும். அவை எந்தெந்த ராசிகள் என்று நம்முடைய பதிவில் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
மேஷம்:
நவபான்ஜமா யோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. உங்களின் வாழ்க்கை நிலையானது மாறக்கூடும். புதிதாக வீடு அல்லது வாகனம் வாங்குவீர்கள். வேலை இல்லாமல் வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலை கூட இந்த நேரத்தில் முடிவடையும். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் ஆனதுஅதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் இந்த நேரத்தில் அதனை செயல்படுத்தலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகமானது சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். திருமானவர்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உங்களின் துணை எல்லா விஷயத்திலும் பக்க பலமாக இருப்பார்கள். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரத்தில் நீங்கள் செய்யலாம். பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் அங்கீகாரம் ஆனது அதிகரிக்கும்.
மீனம்:
நவபஞ்சம யோகமானது மீன ராசிக்காரர்களுக்கு பல விதத்தில் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை வரன் கிடைக்கும். நீங்கள் காதலித்து வந்தால் அவர்களே திருமணம் செய்ய கூடிய யோகம் கிடைக்கும். பணமானது உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏதும் இருந்தால் அவை முடிவுக்கு வரக்கூடும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசை இந்த நேரத்தில் நிறைவடையும்.