1. Home
  2. ஜோதிடம்

NewsTM இந்த வார ராசிபலன்கள்- டிசம்பர் 16 - 22 வரையிலான வாரபலன்

NewsTM இந்த வார ராசிபலன்கள்- டிசம்பர் 16 - 22 வரையிலான வாரபலன்

newstm-weekly-astrology

NewsTM இந்த வார ராசிபலன்கள்- டிசம்பர் 16 - 22 வரையிலான வாரபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

டிசம்பர் 16 முதல் 22 வரையிலான வார பலன்

இந்த வார கிரக மாற்றங்கள்:

17.12.2018 அன்று இரவு 1.48 மணிக்கு சந்திர பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்

17.12.2018 அன்று பகல் 11.18 மணிக்கு செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்

20.12.2018 அன்று காலை 8.40 மணிக்கு சந்திர பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்

22.12.2018 அன்று பகல் 1.15 மணிக்கு சந்திர பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார்

உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) நயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பையும் பெறும் மேஷ ராசியினரே இந்த வாரம் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு: சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு   உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பரிகாரம்: துர்க்கை அம்மனை பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) எண்ணியதை செயல்படுத்த எதையும் செய்ய தயங்காத ரிஷப ராசியினரே, இந்த வாரம்  சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பரிகாரம்:  கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் மிதுன ராசியினரே நீங்கள் தந்திரசாலி. இந்த வாரம்  எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிகடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்) உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உடைய கடக ராசியினரே, இந்த வாரம்  எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். பரிகாரம்: ஆதிபராசக்தியை பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனிசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சிம்மராசியினரே இந்த வாரம்  பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும். பரிகாரம்: சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைய கன்னி ராசியினரே, இந்த வாரம்  வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.  தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.  பரிகாரம்: பகவத்கீதையை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்டமான கிழமைகள்: புதன், வெள்ளிதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணமுடைய துலாராசியினரே, இந்த வாரம்  எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  பணவரத்து தாமதப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும்.  கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.   மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.  பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.  அதிர்ஷ்டமான கிழமைகள்: செவ்வாய், வெள்ளிவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) மற்றவர்களுக்காக போராடும் குணமுடைய விருச்சிக ராசியினரே, நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த வாரம்  காரியதடை தாமதம் நீங்கும்.  வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது.  வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள்  சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள். பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்டமான கிழமைகள்: செவ்வாய், வியாழன்தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்) தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடைய தனுசு ராசியினரே இந்த வாரம்  பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்டமான கிழமைகள்: வியாழன், சனிமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய மகர ராசியினரே, இந்த வாரம்  ஏதேனும் வீண் கவலைகள் ஏற்படலாம். காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன்  பேசுவது நல்லது. உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும் படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது. பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும். அதிர்ஷ்டமான கிழமைகள்: ஞாயிறு, சனிகும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்) புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்கும் குணமுடைய கும்ப ராசியினரே, இந்த வாரம்  விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும்.  தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.  அவர்களால்  நன்மையும் உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.  சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பரிகாரம்: திருப்பதி பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும். அதிர்ஷ்டமான கிழமைகள்: வியாழன், சனிமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசியினரே, இந்த வாரம்  எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த  பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில்  அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.  அதிர்ஷ்டமான கிழமைகள்: புதன், வியாழன்

newstm.in

Trending News

Latest News

You May Like