இந்த வார ராசிபலன்-22-28-செப்டம்பர்- 2019

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இந்த வார ராசிபலன்

இந்த வார ராசிபலன்-22-28-செப்டம்பர்- 2019
X

newstm-weekly-astrology-22-28-sep-2019

இந்த வார ராசிபலன்-22-28-செப்டம்பர்- 2019

கணித்தவர் : கண்மணி

22.09.2019 முதல் 28 . 09.2019 வரையிலான இந்த வார ராசிபலன்கள்..

மேஷம்:  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அனைவரிடமும் அன்பாக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம்.  பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது  நல்லது.  தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும்.  முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை  கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல்  இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி  கிடைக்கும். பரிகாரம்: கன்னி பெண்கள் 9 பேருக்கு தாம்பூலம், பூ, மஞ்சள் கொடுத்து உபசரிக்க எல்லா பிரச்சனைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனிரிஷபம்:  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அனைவரையும் வசீகரிக்கும்  ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும்.  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை  காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை  கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன்   மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும் பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.மிதுனம்:  கிரகநிலை: ராசியில் சந்திரன், ராஹூ - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: பசிக்கு உணவலிக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை  எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம்  ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை  தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும்.உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம் குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும்.உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம்  உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது  நல்லது. பரிகாரம்: குருவுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிகடகம்:  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: படிபடியாக முன்னேர நினைக்கும்  கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக  எண்ணங்கள் அதிகரிக்கும்.  உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.  உல்லாச பயணங்களும்  செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது  பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக  நடைபெறும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து  செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள்  உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.  பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன  போக்கு காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சகமாணவர்களிடம் நிதானமாக பழகுவது  நன்மை தரும். பரிகாரம்: சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்சிம்மம்:  கிரகநிலை: ராசியில்  செவ்வாய் -    குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: வாழ்கையை வெற்றிப் பாதையாக ஆக்க நினைக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும்  வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது  கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க  பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும்  வந்து சேர்வார்கள்.  கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை  அணிகலன்களை  வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும்.  வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிகன்னி:  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன்,  சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் ,  ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றும் கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய  அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும்  எச்சரிக்கையும் கவனமும் தேவை.  தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு  தேவையான  பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த  பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.  பிள்ளைகள்  மீது பாசம் அதிகரிக்கும்.  அவர்களுடன் இனிமையான  பேசி பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனிதுலாம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது- பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். எதிர்பார்த்தபடி  காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை  தரும்.  தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம்  தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம்  பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும்  காரியம் வெற்றியாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளிவிருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் ,  ராஹு- தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கும் திறமை பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ  பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும்.புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும்  ஏற்படும். மதிப்புகள் கூடும். தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும்.  வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி  மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  திடீர்  மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது  நல்லது. பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை  தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம்  காட்டுவீர்கள்  பரிகாரம்:  அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும்.  வாழ்க்கை வளம் பெறும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிதனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் , ராஹு- பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில்சூர்யன், புதன்,  சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடும் திறமை பெற்ற தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன்  மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய  பாக்கிகள்  வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை  தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான  விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள்  மூலம் மதிப்பு கூடும்.  பணவரத்து திருப்திதரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண்  அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.மகரம்: கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் , ராஹு  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்சூர்யன், புதன்,  சுக்ரன்-  லாப ஸ்தானத்தில்  குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம்.  வாகனங்களில் செல்லும் போது  கவனம் தேவை. அடுத்தவருடன்  பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.  தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல்  செய்வதில் வேகம் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல்  அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம்  நன்மை ஏற்படும்.  பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும்  கிடைக்கும். பெண்கள் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். பரிகாரம்: அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,   ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி  குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம்  கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக  ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட  மாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு  கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள் பரிகாரம்:  சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன் , ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன்,  சுக்ரன்-   பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரகமாற்றங்கள்: 23-Sep-19 இரவு 01:14 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-Sep-19 மாலை மணி 6.02 மணிக்கு  புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 காலை 04:17 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 26-Sep-19 மாலை 03.11 மணிக்கு  செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 28-Sep-19 காலை 06.39 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பவரான மீன ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர். இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான  விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள்  எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.  பணவரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள் பரிகாரம்:  தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

newstm.in

Tags:
Next Story
Share it