NewsTM இந்த வார ராசிபலன்கள்! அக்டோபர் 14 முதல் அக்டோபர் 20 -ம் தேதி வரை
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இந்த வார ராசி பலன்கள்!அக்டோபர் 14 முதல் அக்டோபர் 20 -ம் தேதி வரை!

newstm-weekly-astrology
கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அக்டோபர் 14 முதல் 20 வரையிலான வார பலன்
இந்த வார கிரக மாற்றங்கள்:
14.10.2018 அன்று மாலை 4.18 மணிக்கு சந்திர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்
17.10.2018 அன்று விடியற்காலை 3.11 மணிக்கு சந்திர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறார்
19.10.2018 அன்று பகல் 2.53 மணிக்கு சந்திர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்
உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!
மேஷம்: காமாட்சி அம்மனின் கடாட்சம் பெற்ற மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் பண வரவு நல்லபடி இருந்தும் தாங்களே எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரித்து காணப்படும். நிரந்தர நோயினால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு அந்நிலை மாறி நல்ல குணமேற்படும். குடும்பத்தில் கணவன் –மனைவியிடையே அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. திருமணத்திற்கான முயற்சிகளை இவ்வாரம் மேற்கொள்ள வேண்டாம். சில தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். அதைத் தவிர்த்திடுங்கள். நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அதில் முன்னேற்றம் ஏற்படும் பழைமையான ஆலயம் ஒன்றிற்குச் சென்று வருவீர்கள். உத்தியோகம்: மேலதிகாரியிடம் கோபப்பட்டுப் பேசி வீண் பகையை வளர்ந்துக் கொள்ளாதீர்கள். வழக்கத்தைவிட இவ்வாரம் உழைப்பு சற்று கடுமையாக இருக்கும். தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையை குறித்த நேரத்தில் முடிப்பதற்காக இரவு-பகல் பாராது பணியாற்ற வேண்டியிருக்கும். தொழில்துறையினருக்கு கடின உழைப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் இருப்பதால் நிம்ம்தியான வாரமிது. ஏற்றுமதித் தொழில் செய்து வருபவர்கள் பண விஷயத்தில் சற்று கவனமாக இருந்து வரவும். கலைத்துறையினர்: நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். என்றாலும் வருமானம் திருப்தியளிக்கும். தயாரிப்பாளர்கள் புதுப்பட தயாரிப்புகளில் இறங்குவதன் மூலம் லாபத்தைப் பெறமுடியும். அரசியல்துறையினர்: கட்சிப் பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் பாடுபட்டு உழைத்து வருவீர்கள். அத்த்கைய உழைப்பு சில தருணங்களில் மன விரக்தியை ஏற்ப்படுத்தும். மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும். அதானால் நன்மை ஏற்படும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினைகள் எழக்கூடும். அலுவலகம் சென்று வரும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பரிகாரம்: முருகப் பெருமானை விளகேற்றி வழிபடுங்கள். அரளிமாலை சாற்றுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்ரிஷபம்: மீனாட்சி அம்மனின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் வருமானம் சுமாராக இருக்கும். என்றாலும் வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டிருந்தால் படிப்படியாகவே குணமாகும். குடும்பத்தில் புதிய வீடு அல்லது நிலம் வாங்க வேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். அதனால் நன்மை ஏற்படும். தற்போது வசித்துவரும் வீட்டிலிருந்து வேறொரு வசதியான வீட்டிற்குக் குடிபெயரும் எண்ண்ம் மனதில் குடிகொண்டிருக்கும். திருமண வயதில் பெண்ணோ அல்லது பிள்ளையோ இருப்பின் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் இறங்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கவில்லையே என மனம் வருந்துவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயத்தில் தங்கள் மூக்கை நுழைக்கவேண்டாம். தொழில் உற்பத்தி நல்லபடி இருக்கும் என்றாலும் வருமானம் எதிர்பார்த்த அளவிற்குக் கைக்குக் கிடைக்காது. தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ள வேண்டிவரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டிருப்பீர்கள். அதனால் லாபம் இல்லாவிட்டாலும், நஷ்டம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. கலைத்துறையில் சின்னத்திரை கலைஞர்களுக்கு தடைபட்டிருந்த சில நல்ல வாய்ப்புகள் இப்போது கிடைக்க ஆரம்பிக்கும். தாங்கள் எதிர்பார்த்த வருமானம் இல்லையே என்ற காரணத்தினால் கிடைக்கும் வாய்ப்பினை நழுவவிட்டுவிட வேண்டாம். அரசியல்துறையினர் உடல்நலனில் கவனத்தைச் செலுத்தி வருவது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது நல்லது. மாணவர்கள் தனியாக வாகனம் ஒட்டிச் செல்வதைத் தவிர்ப்பது நல்ல்து ஏனெனில் சிறுசிறு விபத்துகள் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. பெற்றோர் அனுமதியின்றி வெளியிடங்களுக்குச் செல்லவேண்டாம். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமிது. அலுவலகம் சென்றுவரும் பெண்கள் பொறுமையாக இருந்துவர வேண்டியது அவசியம். பரிகாரம்: நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பைரவரை 11 முறை வழிபடவும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிமிதுனம்: அங்காள பரமேஸ்வரியின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இல்லாவிட்டாலும் போதுமென்ற அளவிற்கு இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும். குடும்பச் சூழ்நிலை மனநிறைவை அளிக்கும். சகோதரர் அல்ல்து சகோதரி யாரேனும் தங்களிடம் சண்டை போட்டுக்கொண்ட்டு பிரிந்திருந்தால் அவர்கள் இப்போது ஒன்றுசேர்வதற்குச் சாத்தியக்கூறு உள்ள்து ஆரோக்கியம் நல்லபடி இருக்கும். என்றாலும் தாயாரின் உடல்நலனில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வருவது நல்லது. உத்தியோகத்தைப் பொறுத்த வரையில் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் . ஏற்கெனவே பணிபுரிந்துவரும் அன்பர்கள் சிறு சிறு ஊதிய உயர்வு ஒன்றை எதிர்பார்க்கலாம். ஊர் மாற்றம் கிடைத்தால் அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். தொழிலில் உற்பத்தி நல்லபடி இருக்கும். குறைவான வருமானமே இருந்திருந்திருந்த நிலை மாறும். ஏற்றுமதி-இறக்குமதித் தொழில் செய்து வருபவர்களுக்கும் அனுகூலமாக இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்ககூடும். புதிய திட்டங்களை தாராளமாக மேற்கொள்ளலாம். அதனால் நன்மையே ஏற்படும். கலைத்துறையினர் சிறு முயற்சியிலேயே நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருமானமும் அதிகரித்து காணப்படும். ஷூட்டிங் சம்பந்தமாக சிலர் வெளியூர் சென்றுவர வேண்டியிருக்கும். தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் கடின உழைப்பு ஏற்படும். அரசியல்துறையினர் கட்சியில் பொறுப்பான பதவியொன்றில் தாங்கள் அமர்த்தப்படுவதால் சந்தோஷத்திற்குக் குறைவிராது. மாணவர்கள் தொழில் ரீதியான படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்து வருபவர்கள் மிகவும் பாடுபட்டு படித்து வருவீர்கள். அந்த் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகச் சூழல் மனநிம்மதியைத் தரும் பரிகாரம்: ஸ்ரீமன் நாராயணருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிகடகம்: கருமாரியம்மனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் அன்பர்கள் சிலர் வாடகை வீட்டிலிருந்து தங்கள் சொந்த் வீட்டிற்குக் குடிபெயர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். உடலில் பாதிப்புகள் ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ள்து. அவ்வாறு ஏற்பட்டாலும் தங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்ககூடும். அதனால் உற்சாகமாக காணப்படுவீர்கள். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. நெருங்கிய நண்பர் ஒருவரின் வருகையினால் குடும்பத்தில் வீண் பிரச்ச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே கவனம் தேவை. குலதெய்வ வழிபாட்டினை சில்ர் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால் வழக்கத்தை விட பணிச்சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். இருப்பினும் நீங்கள் எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வு, இதர சலுகைகள் தடையின்றிக் கிடைப்பதால் உற்சாகம் பிறக்கும். தொழில்துறையினருக்கு உழைப்பு கடுமையாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற முன்னேற்றம் இருப்பதனால் நிம்மதியாக காணப்படுவீர்கள். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடும் போது அதிக கவனம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்காமலிருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்திருந்த் வாய்ப்புகள் கிடைப்பது சற்று கடினமே. என்றாலும் தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதால் ஒருசில வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். அரசியல்துறையினருக்கு கட்சியில் தங்களுக்கு நற்பெயர் கிடைப்பதைக் கண்டு சிலர் பொறாமைப்படுவார்கள். அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். தங்கள் அன்றாடம் செய்துவரும் பணிகளைத் தவறாது செய்து வருவதன் மூலம் சிறந்த் முன்னேற்றம் காத்துள்ள்து. மாணவர்களுக்கு படிப்பில் மனம் ஈடுபட மறுக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விசேஷ போதனைக் கல்விக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. விளையாட்டுகள், போட்டிகளில் சிறந்து விளங்குவீர்கள். பெண்களுக்கு வருமானம் திருப்தி தருவதால் குடும்ப நிர்வாகம் செய்வது எளிதாகும். வேலைக்குச்சென்று வரும் பெண்கள் ஊதிய உயர்வு ஒன்றை எதிர்பார்க்கலாம். பரிகாரம்: அம்பாளை வழிபட ஏற்றம் உண்டு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்சிம்மம்: வாராஹி அம்மனின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டியிருந்தால் எடுக்கலாம். வரன் தேடும் முயற்சிகளில் இறங்குவதன் முலம் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ள்து. அது மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படினும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது மனஆறுதலை அளிக்கும். பணியில் இருந்து ஒய்வுபெற்றவர்களுக்கு நிலுவையிலிருந்த பாக்கிப் பணம் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்புள்ள்து. தொழிலில் வருமானத்திற்குக் குறைவிராது. புதிய விஸ்தரிப்புத் திட்ட்ங்களில் ஈடுபடலாம். நிதிநிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைப்பது சந்தோஷதை அளிக்கும். வியாபாரிகளுக்கு தாங்கள் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகவே கிடைக்கும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் பொறுமை மிகவும் அவசியம். கலைத்துறையினர் தடைபட்டிருந்த வாய்ப்புகள் நல்லபடியாக கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் இத்துறை கலைஞர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணமும் நிச்சயிக்கப்படும். அரசியல்துறையினருக்கு கட்சியில் முக்கிய பதவியொன்றை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தால் அவை கிடைப்பதில் தடைகளும், தாமதமும் ஏற்படக்கூடும். மாணவர்கள் மேறகல்வி பயில விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டாலும் தங்களின் கடின முயற்சியினால் இறுதியில் எப்படியும் கிடைத்துவிடும். மனதினை தளரவிட வேண்டாம். பெண்களுக்கு நன்மை தரக்கூடிய வாரமாக இது இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. பரிகாரம்: தினமும் சிவபுராணத்தை படியுங்கள். மனம் தெளிவடையும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்கன்னி: விசாலாட்சி அம்மனின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் கண் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் இருப்பின் அவை குணமடையும். தங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்கள் சொன்ன நேரத்தில் திரும்ப கொடுத்து விடுவார்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் முன்னேற்ற வழியில் செல்லும். திருமண வயதில் பெண்ணோ அல்லது பிள்ளையோ இருப்பின் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். கண்வன்-மனைவியிடையே சண்டைசச்சரவுகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உத்தியோகஸ்தர்கள் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அன்பர்களுக்கு நற்செய்தியொன்று தேடிவரும். அது தங்கள் மனதிற்குப் பிடித்த வேலையாகவும் இருக்ககூடும். வருமானமும் திருப்தி தரும். தொழிலில் கவனத்தைச் செலுத்தமுடியாது. எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் கவலைப்பட வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கவேண்டாம். ஏனெனில் அவற்றை அடைப்பதில் பிரச்சினைகள் எழக்கூடும். கலைத்துறையினர் கலைநிகழ்ச்சிக்காக சிலர் வெளியூர் சென்றுவர வேண்டியிருக்கும். வாய்ப்புகள் நல்லபடி கிடைக்கும் வருமானம் திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக முக்கிய பதவியொன்றை எதிர்பார்க்கலாம். தொண்டர்களிடையே மதிப்பும், மரியாதையும் அதிகரித்து காணப்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது மாணவமணிகளுக்கு அவ்வப்போது மனச் சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் கல்வி நலனை அது பாதிக்காது. விளையாட்டுகள், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியடைவீர்கள். பெண்மணிகள் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சிலர் வெளியூருக்குச் சென்று வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். பரிகாரம்: விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நினைத்தது நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிதுலாம்: ஆதிபராசக்தியின் அருள் பெற்றா துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் தங்கள் பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடித்து வருவது மிகவும் அவசியம். தாங்களே எதிர்பாராதவகையில் கோபம் அதிகரித்து காணப்படும். அதன் காரணமாக குடும்பத்திலுள்ளவர்களிடமும், நண்பர்களிடமும் பகை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பணவரவிற்குக் குறைவிராது செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிடுவீர்கள் நிரந்தர நோயினால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு, நல்ல குணம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்து வருவது நல்லது. தங்கள் சொந்தப் பிரச்சினையை சகஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழில் செய்பவர்களுக்கு சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் மனஸ்தாபம் உண்டாகும். கூடியவரை வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது கலைத்துறையினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக கலைஞர்களிடம் கோபப்பட்டுப் பேசி வீண் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம் . அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து சில உதவிகளைப் பெறமுடியும். அரசியல்துறையினர் கட்சியில் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் மட்டும் தங்கள் கவனத்தைச் செலுத்தி வரவும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது மாணவமணிகள் நெருங்கிய நண்பர்களேயானாலும் அவர்களிடம், எல்லை மீறிப் பழகாமல் இருப்பது நல்லது. ஏனெனில் தாங்கள் எதிர்பாராத தருணத்தில் சக நண்பர்களுடன் சண்டைச் சச்சரவுகள் ஏற்படக்கூடும். கவனம் தேவை. பெண்கள் பொறுமையாக இருந்துவர வேண்டியது அவசியம். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கலாம். பரிகாரம்: யோக நரசிம்மரை நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். கோபம் குறையும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிவிருச்சிகம்: லலிதாம்பிகையின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் செலவுகள் சற்று அதிகரித்து காணப்படும். குழந்தைகளின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்திற்காகவும் செலவு செய்ய நேரிடும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை எதுவும் ஏற்படாது. ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும் என்றாலும் தாயாரின் உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. அன்பர்கள் சிலர் தற்போது வசித்து வரும் வீட்டிலிருந்து வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். அதில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். திருமண வயதிலுள்ள அன்பர்கள் மனதிற்குப் பிடித்த வரன் அமையும் உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற முன்னேற்றம் இல்லை என கவலை பட வேண்டாம். உங்களுக்கு மற்றபடி சக ஊழியர்களினால் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. தொழிலில் உற்பத்தி திருப்தி தரும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் சிறந்த முன்னேற்றம் காத்துள்ளது. வியாபாரிகளுக்கு நன்மையளிக்கக்கூடியதாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களைத் தேடி வருவார்கள் கலைத்துறையினருக்கு எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் நல்லபடியாக கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். முதலீடு செய்து புதுப்பட தயாரிப்புகளில் ஈடுபடலாம். அரசியல்துறையினர் கட்சியில் சிலர் முக்கிய பதவியொன்றை எதிர்பார்க்கலாம். அதனால் மனதில் சந்தோஷம் ஏற்படும். தங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர்கள் இப்போது தங்களுக்கு ஆதரவாக மாறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் மனம் ஒன்றும். தொழில் ரீதியான படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்து வருபவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடைபெற்று வந்தால் அதை சிறப்பாக எழுதி முடிப்பீர்கள். பெண்களுக்கு மனக் கவலை அதிகரிக்கும். வேலை பாததுவரும பெண்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது பரிகாரம்: தினமும் கந்தர் சஷ்டி கவனம் சொல்லவும். மனம் ஒருநிலைப்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்தனுசு: மஹாலட்சுமியின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பச் சூழ்நிலை மனநிறைவை அளிக்கும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்து :வருவார்கள். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். மனைவியின்உடல்நலனில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. திருமண வயதிலுள்ள பெண்களுக்கு வரன் அமைய சாதகமாக கிரகநிலைகள் அமைந்துள்ளன. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருந்து வருவது அவசியம். பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் மிகவும் அதிஜாக்கிரதையாக இருந்து வருவது நல்லது.ஏனெனில் சிறு தவறுகூட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். தொழிலில் சிறுசிறு சிக்கல்கள் ஏற்படக்கூடும். என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படுவதற்கில்லை. ஏற்றுமதித் தொழில் செய்து வருபவர்களுக்கு லாபமாக இருக்கும். வியாபாரிகள் அதிக அளவில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. ஏனெனில் எதிர்பார்த்தஅளவிற்கு லாபம் கிடைக்குமா என்றால் சந்தேகம்தான் கலைத்துறையினருக்கு தடைபட்டிருந்த வாய்ப்புகள் நல்லபடியாக கிடைக்கும். நிலுவையிலிருந்த பாக்கிப்பணம் இப்போது தங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அரசியல்துறையினருக்கு கட்சிப் பணிகள் அனைத்தும் சுமூகமாக நடைபெறறுவரும். எதற்காகவும நீங்கள் கவலைப்படவேண்டாம். தொண்டர்களிடையேயும் , மக்களிடையேயும் ஆதரவு அதிகரிக்கும் மாணவர்கள் தொழில் ரீதியான படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்து தேர்வுகள் ஏதேனும் எழுதியிருந்தால் அவற்றில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைவீர்கள். அது உங்களுக்கும், பெற்றோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். பெண்களுக்கு உயர்வான பதவிகள் கிடைக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் கவனச் சிதறல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் பரிகாரம்: ஸ்ரீ ராமரை வணங்கவும். நல்லவர்கள், கெட்டவர்கள் அடையாளம் தெரியும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி மகரம்: காயத்ரிதேவியின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் உறவுகளிடையே மனக் கசப்புகள் ஏற்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். தாங்கள் சிரமப்படும் தருணத்தில்நெருங்கிய நண்பர் ஒருவரின் உதவி கிடைப்பது மன ஆறுதலை அளிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது பண வரவிற்குக் குறைவிராது. செலவுகள் ஏற்படினும் அதைத் தங்களால் சமாளித்துவிடமுடியும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருளொன்றை வாங்குவீர்கள். திருமண முயற்சிகளை இவ்வாரம் மேற்கொள்ளலாம். பழைமையானஆலயத்திற்குச் சிலர் சென்று வருவீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்த வரையில் இதுவரை வேலை கிடைக்கவில்லையே என மனம் வருந்தி வந்தவர்களுக்கு அந்நிலை மாறி மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கக்கூடும். அது சந்தோஷத்தை அளிக்கும். ஏற்கெனவே பணிபுரிந்து வரும் அன்பர்களுக்கு பதவி உயர்வு ஒன்று கிடைக்க சிறந்த வாய்ப்புள்ளது தொழில்துறையினருக்கு எதிர்பார்த்த உற்பத்தியும், வருமானமும் இருக்கும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் தாராளமாக ஈடுபடலாம். சக பாகஸ்தர்களினால் பிரச்சினைகள் எதுவும்ஏற்படாது. விற்பனை அதிகரிக்கும். லாபமும் உயரும். புது வாடிக்கையாளர்கள் தங்களைத் தேடிவருவது மனதிற்குஉற்சாகத்தை அளிக்கும். கலைத்துறையினர் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது ஸ்டண்ட் நடிகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து வருவது அவசியம். ஏனெனில் சிறுசிறு விபத்துகள் ஏற்படவாய்ப்புள்ளது. மற்றபடி வாய்ப்புகள் கிடைப்பதில் பஞ்சமிராது அரசியல்துறையினர் கட்சியில் முக்கியமுடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டியிருந்தால் அவற்றை துணிந்து எடுக்கலாம். அதனால் நன்மை ஏற்படும். பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் அவற்றை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். மாணவர்களில் மேற்கல்வி பயில்பவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். தங்களின் கடின உழைப்பு நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும். சக நண்பர்கள் தங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பெண்களுக்கு நெருங்கிய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகச் சூழல் திருப்திகரமாக இருக்கும். பரிகாரம்: நவகிரகத்தை வலம் வாருங்கள். தடைகள் விலகும். அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, செவ்வாய்கும்பம்: காளிகாம்பள் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கும். குடும்பச் சூழ்நிலையும் மனநிறைவைத் தரும். பிரிந்து சென்ற உறவுகள் இப்போது மீண்டும் இணைவார்கள். அது மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவீர்கள். திருமண வயதிலுள்ளவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் இறங்குவதன் மூலம் நற்செய்தியை எதிர்பார்க்க முடியும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படக்கூடும். அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். பதவி உயர்வு சில தடைகளுக்குப் பிறகு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது அதிக கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்குக் கிடைப்பது கடினம். வியாபாரிகள் சிலர் கடனுதவி பெற வங்கியில் விண்ணப்பித்திருப்பீர்கள். அது கிடைப்பதற்கு மேலும் சிறிதுகாலம் பிடிக்கும். அதுவரை பொறுமையாக இருந்து வருவது அவசியம். கலைத்துறையினர் புதுப்பட வாய்ப்புகள் எதையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தால் அவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படக்கூடும். ஏற்கெனவே தாங்கள் நடித்து வரும் காட்சிகளில் கவனத்தைச் செலுத்தி வருவது நல்லது. அரசியல்துறையினர் கட்சிக்காக அயராது உழைத்தும் முன்னேற்றம் எதுவும் இல்லையே என மனம் வருந்தி வந்த உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அதனால் மனதில் உற்சாகம் கரைபுரண்டோடும். புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தை ஒத்திப் போடவும். மாணவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமிது. தேர்வுகள் எதுவும் எழுதியிருந்தால் அதிகமதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுகள், போட்டிகளில் நீங்கள் கலந்துகொள்ளலாம். பெண்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும். வேலை பார்த்து வரும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையாக இருந்து வரவும். பரிகாரம்: காகத்திற்கு அன்னமிடவும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, செவ்வாய்மீனம்: மூகாம்பிகையின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் நெருங்கிய உறவினர்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மனநிம்மதிக்கு குறைவிருக்காது. குடும்பரீதியாகவோ அல்லது தாங்கள் செய்துவரும் தொழில் சம்பந்தமாகவோ முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கமுடியாமல்சிரமப்படுவீர்கள். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு வரன் அமைய சிறந்த வாய்ப்புள்ளது. அதுவும் மனதிற்குப்பிடித்த மாதிரி அமைவதால் சந்தோஷத்திற்குக் குறைவிராது. உத்தியாகஸ்தர்கள் அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்து வருவது நல்லது தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வரவும். குடும்ப விஷயத்தை சகஊழியர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில்துறையினர் கவனமாக இருநது வர வேண்டியது அவசியம். தொழில் ரீதியான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்பட வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடாமலிருப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் எவரையும் நம்பி கடன் கொடுக்கவேண்டாம். கலைத்துறையினர் கோபப்பட்டுப் பேசி வீண் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். ஏனெனில் தாங்களே எதிர்பாராத வகையில் அவர்களிடமிருந்து சில உதவிகளைப் பெறமுடியும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தின் நற்பெயர் கிடைக்கும் அதன் காரணமாக கட்சியில் முக்கிய பதவியொன்றை எதிர்பார்க்கலாம். இருப்பினும் கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து வேறு எதையும், யாரிடமும் பேசவேண்டாம். மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதுவும் தாங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்திலேயே இடம் கிடைக்க சிறந்த வாய்ப்புள்ளது பெண்களுக்கு பணவரவு நல்லபடி இருப்பதால் கடன் வாங்க வேண்டாம். குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினைகள் இராது. வேலை பார்த்ததுவரும் பெண்கள் அலுவலகத்தில்முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் சொல்லி வாருங்கள். காரியத்தடை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளிnewstm.in
Tags:
Next Story